கம்பராமாயணம் 5144 · சுந்தர 4.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏகவாளி - ஒற்றை அம்பை; அ இந்திரன் காதல் மேல் - (காகமாய் வந்த) அந்த இந்திரன் புதல்வனாகிய சயந்தன் மேல்; போக ஏவி - செல்லும்படி பிரயோகித்து; அது - அந்த அம்பானது; கண் பொடித்த நாள் - கண்ணை அழித்த காலத்தில்; காகம் முற்றும் - எல்லாக் காகங்கட்கும்; ஓர் கண் இலவாகிய - ஒற்றைக் கண் இல்லாதபடி ஆன; வேக வென்றியை - தடையற்ற வெற்றிச் சிறப்பை; தன்தலைமேற்கொள்வாள் - தன்னுடைய தலைமேலே வெற்றி கொண்டாடுவாள்.
'சித்திரகூடத்திருப்ப' என்னும் பெரியாழ்வார் பாசுரத்தையும், நாட்டு வழக்கையும் அடியொற்றி இப்பாடல் எழுந்தது. இந்திரன் செம்மல் - சயந்தன்; குற்றவாளியாகிய சயந்தன் கண் ஒன்றுமே இராமன் அம்புக்கு இலக்காயிற்று. எனினும் அவன் இனமும் ஒரு கண் இழந்தன என்பார். 'கண்ணிலவாகிய வேகவென்றி' என்றார். எனவே ஆகிய பாடம் சிறக்கும் என்று அண்ணாமலை - பதி - பேசும். (கண்ணில் என்புழி வாக்கிய பாடம் ஒதுக்கப்பட்டது)
ஆங்கிலம் · English translationAI
Translation
- A single arrow he loosed against that son of Indiran,
- sending it to go after him; on the day it destroyed his eye,
- all crows became creatures lacking one eye —
- that swift victory she holds high upon her head.
What the poem says
Cītai remembers an episode at Citrakūṭam: Indiran's son Cayantaṉ, disguised as a crow, attacked her, and Irāmaṉ sent a single blade of grass charged as an arrow after him. It pursued him through the worlds until he surrendered, and it took one of his eyes.
Folk belief holds that crows ever since see with only one eye, and the poet makes the whole race share the punishment. Cītai reveres this proof of Irāmaṉ's protective power. The verse follows a hymn of Periyāḻvār and popular tradition.