கம்பராமாயணம் 5145 · சுந்தர 4.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெவ் விராதனை - கொடுமைசெய்யும் விராதனை; மேவு - சென்று சேர்ந்த; அருந் தீவினை வவ்வி - கொடிய பாவங்களை வாங்கிக் கொண்டு; மாற்ற அரும் - வேறு எவராலும் போக்க முடியாத; சாபமும் - சாபத்தையும்; மாற்றிய - போக்கிய; அவ் இராமனை உன்னி - அந்த இராமனை நினைந்து, தன் ஆருயிர் - தன்னுடைய அருமையான உயிர்; செவ் இராது - செம்மையாய் (உறுதியாய்) இல்லாமல், உணர்வு ஓய்ந்து - அறிவு தளர்ச்சி அடைந்து; உடல் தேம்புவாள் - உடல் இளைப்பாள்.
விராதனையே மன்னித்த பெருமான் தன்பால் அருளின்றி உள்ளான்; காரணம் தன் மேல் சீற்றம் போலும் என்று கருதும் போது பிராட்டியின் துன்பம் அளவு கடந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The grievous sins that clung to cruel Virātaṉ
- he took away, and the curse none else could lift he lifted —
- thinking of that Irāmaṉ, her precious life
- no longer steady, her senses failing, her body wastes.
What the poem says
Cītai remembers how Irāmaṉ, in the Daṇḍaka forest, killed the demon Virātaṉ and so freed him from his sins and from a curse that had made him a demon.
If Irāmaṉ showed such grace even to the cruel Virātaṉ, why is he so ungracious to her? Perhaps he is angry with her. The thought pushes her grief beyond bearing, and her body weakens.