கம்பராமாயணம் 5146 · சுந்தர 4.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருந்தனள் - (பிராட்டி) இருந்தாள்; திரிசடை எனும் - திரிசடை என்கின்ற; இன்சொலின் திருந்தினாள் ஒழிய - இனிய சொற்கள் பேசுவதில் திருத்தம் பெற்ற மங்கையைத் தவிர; இருந்த - (பிராட்டியைக் காத்துக் கொண்ட) சுற்றியிருந்த; அருந்திறல் தீவினை - பேராற்றலும் தீவினையும் உடைய; அரக்கியர் - அரக்கப் பெண்கள்; நள் அல் உற பொருந்தலும் - நடுச்சாமத்தை இரவு அடைந்த அளவில்; துயில் நறைக்களி - உறக்கமாகிய கள்ளின் மயக்கத்தில்; பொருந்தினார் - ஐக்கியமானார்கள்;
இன்சொலின்திருந்தினள் என்னும் தொடர் மங்கை என்னும் பொருள் தந்து நின்றது. திரிசடை என்னும் மங்கை என்க. இருந்தனள் என்னும் தெரிநிலை வினைமுற்றுக்கு எழுவாய் ஒளியிலா மெய்யள். 42. உணங்கிய நங்கை எழுவாயாயின் அங்கே ஒரு இருந்தனள் என்னும் முற்று உள்ளது. ஆதலின் அது பொருந்தாது. இவ் விருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம் என்னும் சீர்களைப் பெற்று வரும். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 2/77 உள்ளன. (மணிமலர் 76)
ஆங்கிலம் · English translationAI
Translation
- So she remained. Save for the one called Tiricaṭai,
- refined in gentle speech, the evil ogresses who stayed there,
- mighty and fierce, as the night reached its middle,
- sank into sleep's drunken stupor.
What the poem says
A new metre begins. Cītai sits on in her sorrow. Around midnight all the ogresses set to guard her fall asleep, as though drunk on the wine of slumber, all except Tiricaṭai, Vīṭaṇaṉ's daughter, who is kind and gentle of speech.
The commentary notes that 'refined in gentle speech' stands as a noun for the young woman Tiricaṭai, and that the subject of 'she remained' is Cītai.