கம்பராமாயணம் 5147 · சுந்தர 4.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயிடை - (அரக்கியர் உறங்கியிருந்த) அப்பொழுது (பிராட்டி); திரிசடை என்னும் - திரிசடை என்னும் பெயர் பெற்ற; அன்பினால் - அன்பினாலே; தாயினும் இனியவள் தன்னை - தாயைவிட இனிமையானவளை நோக்கினாள் - பார்த்து; தூயநீ - பரிசுத்தமாயிருக்கும் நீ; கேட்டி - கேட்பாயாக! (நீ) என் துணைவியாம் - நீ என்னுடைய தோழியாவாய்; எனா - என்று; மேயது ஓர் கட்டுரை - அனுபவித்ததை உணர்த்தும் ஒப்பற்ற மொழியை; விளம்பல் மேயினாள் - சொல்லத் தொடங்கினாள்.
அரக்கியர் உறங்கும்சமயத்தில் பிராட்டி திரிசடையிடம் தான் அனுபவத்திற் கண்டதைக் கூறினாள். மேயது - அனுபவித்தது. மேயது என்னும் தெரிநிலை முற்று பெயரெச்சமாயிற்று. (மேய கட்டுரை மேய கட்டுரை அனுபவமொழி. கட்டுரை என்பது தனித்தன்மையிழந்து மொழி என்னும் பொருள் தந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then she looked at the one called Tiricaṭai, who in love
- was sweeter to her than a mother, and saying,
- 'You who are pure, listen! You are my companion!'
- she began to tell of something she had come to know.
What the poem says
With the guards asleep, Cītai turns to Tiricaṭai, the one ogress who loves her more tenderly than a mother, and confides in her.
She is about to describe what she herself has felt and experienced, a set of omens in her own body, which the following verses relate.