கம்பராமாயணம் 5148 · சுந்தர 4.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொலந்துடி மருங்குலாய் - பொன்னால் செய்யப்பெற்ற உடுக்கை போன்ற இடையை உடைய திரிசடையே; புருவம், கண் முதல் - புருவமும், கண்ணும், முதலியன; வலம் துடிக்கின்றில - வலப்பக்கம் துடிக்கவில்லை; நலம் துடிக்கின்றதோ - நன்மை என்னையடையத் துடித்துக்கொண்டுள்ளதோ (அல்லது); நான் செய் - நான் முன்பு செய்த; தீவினைச் சலம் - தீவினையால் எழுந்த கொடுமை; துடித்து - துடிதுடித்து (என் பக்கம் வந்து); இன்னமும் தருவது - இதற்கு மேலும் தரக்கூடிய துன்பம்; உண்மையோ? - உள்ளதா?; வருவது ஓர்கிலேன் - இனிமேல் நிகழ்வதை ஆராய முடியாமல் உள்ளேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it good fortune that throbs? Or is it true that the cruelty
- of the evil I have done will throb on and bring yet more?
- You whose waist is like a golden drum! My brow, my eye and the rest
- do not throb on the right; what is to come I cannot tell.'
What the poem says
Cītai tells Tiricaṭai that her brow, eye and other parts are twitching, but not on the right side. In Tamil tradition a twitch on the left side is a good omen for a woman and on the right a bad one.
Unsure whether to trust it, she asks whether good fortune is straining to reach her, or whether the fruit of some past wrong has yet more suffering in store. Tiricaṭai's waist is compared to the narrow middle of an hourglass-shaped drum.