கம்பராமாயணம் 5149 · சுந்தர 4.33

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்!

பொருள் · Meaning in Tamil

முதல்வன் - (எனக்கு ஆதாரமான) இராமபிரான்; மிதிலையில் - மிதிலை மா நகரில்; முனியொடு முந்து நாள் - கோசிக முனிவனுடன் வந்த காலத்தில்; துனி அறு - குற்றம் அற்ற; புருவமும் தோளும் நாட்டமும் - புருவமும் தோளும் கண்ணும்; இனியன துடித்தன - இன்பத்தை விளைவிப்பனவாய் துடித்தன; ஈண்டும் - இச்சமயத்திலும்; ஆண்டு என - அங்கே துடித்தாற் போல; நனி துடிக்கின்றன - இடையறாமல் துடிக்கின்றன; (இதன் காரணத்தை) ஆய்ந்து நல்குவாய் - (ஆராய்ந்து) கூறுவாயாக.

"நல் எழில்உண்கணும் ஆடுமால் இடனே" (கலி. 11)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Long ago, when my lord came to Mitilai with the sage,
  2. my flawless brow and shoulder and eye
  3. throbbed sweetly; here too, just as there,
  4. they throb greatly. Consider it and tell me!'

What the poem says

Cītai remembers that when Irāmaṉ first came to Mitilai with the sage Vicuvāmittiraṉ, the same left-side twitching of her brow, shoulder and eye foretold their meeting and marriage.

Now the same signs have returned, and she asks Tiricaṭai to interpret them. The commentary cites an old Kalittokai line in which a woman's left eye twitches as a good sign.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉiyoṭu mitilaiyil mutalvaṉ muntunāḷ
tuṉi aṟu puruvamum tōḷum nāṭṭamum
iṉiyaṉa tuṭittaṉa; īṇṭum āṇṭu eṉa
naṉi tuṭikkiṉṟaṉa; āyntu nalkuvām!