கம்பராமாயணம் 5150 · சுந்தர 4.34

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறந்தனென் - நான் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன்; இதுவும் ஓர் மாற்றம் - இந்த ஒரு மொழியையும்; கேட்டி - கேள்; அறம் தரு சிந்தை - அறத்தைப் பாதுகாக்கின்ற உள்ளத்தைப் பெற்ற; என் ஆவி நாயகன் - என்னுடைய உயிர்த் தலைவன்; பிறந்த பார் முழுவதும் - மூத்தவனாகப் பிறந்ததனால் அடைய வேண்டிய பூமி முழுவதையும்; தம்பியே பெற - தம்பியாகிய பரதனே அடையும்படி; துறந்து - (அவற்றையெல்லாம்) விட்டுவிட்டு; கான் புகுந்த நாள் - காடு புகுந்த காலத்து; வலம் துடித்தது - வலப்பக்கம் துடித்தது.

கேட்டி - ஆல் - அசை. ஆவி நாயகன் - உயிர்த்தலைவன். மகளிர்க்கு வலம் துடித்தல் தீமை யாதலின் இது சீதைக்குத் தீமையை அறிவிப்பதாக ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I forgot — hear this one word more!
  2. When the lord of my life, whose mind upholds dharma,
  3. gave up the whole earth that was his by birth so his brother might have it,
  4. and entered the forest, my right side throbbed.'

What the poem says

Cītai adds another memory. On the day Irāmaṉ renounced the kingdom that was his birthright as the eldest son, so that his younger brother Paratan could have it, and went into the forest, her right side twitched.

For a woman, a twitch on the right warns of misfortune, and that omen proved true when exile and separation followed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟantaṉeṉ ituvum ōr māṟṟam kēṭṭiyāl!
aṟam taru cintai eṉ āvi nāyakaṉ
piṟanta pārmuḻuvatum tampiyē peṟat
tuṟantu kāṉ pukuntanāḷ valam tuṭittatē!