கம்பராமாயணம் 5151 · சுந்தர 4.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அஞ்சல் என்று இரங்குவாய் - பயப்படாதே என்று கருணை காட்டுபவளே! நஞ்சு அனையான் - விடம் போன்ற இராவணன்; வனத்து - காட்டிலே; வஞ்சனை இழைக்க - வஞ்சகத்தைப் புரிய எண்ணி; நண்ணிய நாள் - (பஞ்சவடியை) அடைந்த அன்று; வலம் துடித்த - வலப்புற அங்கங்கள் துடித்தன; வாய்மையால் - (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை தீமை) உண்மையால் உணர்த்தும்; ஈண்டு - இப்போது; எஞ்சல - குறைவில்லாதன; இடம் துடிக்கும் - இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும்; அடுப்பது யாது - என்னை வந்து அடையும் நன்மை யாது; என்றாள் - என்று கூறினாள்.
இரங்குவாய் என்பது திரிசடையை நோக்கிய விளி. வாய்மை - ஆல், துடிக்கும் ஆல் - ஆல்கள் - அசை. வலம் துடித்த வாய்மையால் என்று சேர்த்துப் பொருள் கூறுவாரும் உளர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'On the day he who is like poison came to the forest to work
- his treachery, my right side throbbed; since that came true,
- now my left side throbs without ceasing;
- you who pity me and say "Fear not" — what is coming?' she said.
What the poem says
Cītai sets out her evidence. On the day Irāvaṇaṉ, venomous as poison, came to Pañcavaṭi to carry her off by deceit, her right side twitched, and that warning came true.
Now it is her left side that twitches, steadily and fully. Since the omens have proved reliable before, she asks Tiricaṭai, who always comforts her, what good fortune is about to arrive.