கம்பராமாயணம் 5153 · சுந்தர 4.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிறம் மின்மருங்குலாய் - நன்னிறம் பெற்ற மின்போன்ற இடையை உடைய பிராட்டியே; உன் பசப்பு நிறம் அற - உன்னுடைய மேனியில் உள்ள பசலை நிறம் அற்றுப் போகவும்; உயிர் - உன்னுடைய உயிரானது; உயிர்ப்புஉற - செழிப்படையவும்; பொன் நிறத் தும்பி - பொன் போன்ற மேனியைப்பெற்ற வண்டு; மெல்லென வந்து - மெதுவாக உன் பக்கத்திலே வந்து; செவியில் - உன்னுடைய காதுகளில்; இன்நிறத் தேன் இசை - இனிமையான தேன் போன்ற இசையை; இனிய நண்பினால் - நன்மையை விளைவிக்கும் அன்புடன்; ஊதிப் போயது - இசைத்துச் சென்றது.
பசப்பு - பசலை. கணவனைப் பிரிந்தாரின் உடல் நிறம் மாறுவதைப் "பசலை" என்பர். ஊதுதல் - இசைத்தல். ஒரு செய்தியைப் பிறரறியாமல் கூறுவதை ஊதுதல் என்னும் வழக்கு அன்றும் இருந்தது போலும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So that your pallor may leave you and your life may breathe again,
- with sweet honeyed music and in kindly friendship,
- O you with a waist like lightning, softly into your ear
- a golden bee came, hummed, and went away.'
What the poem says
Tiricaṭai reports a sign she has seen: a golden bee came close to Cītai and hummed sweetly in her ear before flying off.
She reads it as a promise that Cītai's pallor, the sallow colour of a woman separated from her husband, will fade and her spirit will revive. To 'blow' or hum into someone's ear was also an idiom for passing on secret news, which hints at the messenger soon to arrive.