கம்பராமாயணம் 5154 · சுந்தர 4.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேரின் - ஆராய்ந்தால்; ஆயது - அந்த வண்டு; உன் ஆவி நாயகன் - உன்னுடைய உயிர் போன்ற தலைவனால்; ஏயது தூது - ஏவப் பெற்ற தூதுவன்; வந்து எதிரும் - வந்து சந்திப்பான்; என்னும் - என்று தெரிவிக்கும்; தீயவர்க்கு - கொடியவர்களுக்கு; தீயது எய்தல் - தீமை வருவது; திண்ணம் - உறுதியாகும் (அதை உறுதிப்படுத்த); என் வாயது - என்பால் நிகழ்ந்த அனுபவத்தை; கேள் என - கேட்பாயாக! என்று; மறித்தும் கூறுவாள் - மேலும் சொல்லத் தொடங்கினாள்.
அந்த வண்டு உன் உயிர்த்தலைவனால் ஏவப்பெற்ற தூதுவன் உன்னைச் சந்திப்பான் என்பதை அறிவிக்கும் என்றாள். ஆயது - வெறும் சுட்டாய் உள்ளது. "ஆயது அறிந்தனர்" (கம்ப. 412)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If one reads that sign, it says that a messenger sent
- by the lord of your life will come and meet you;
- that evil will befall the evil is certain; now hear
- what has come to me!' and she spoke again.
What the poem says
Tiricaṭai interprets the bee: it means a messenger sent by Irāmaṉ will soon come and meet Cītai. The reader knows this is already true, for Aṉumaṉ is at that moment hidden nearby.
She adds that ruin is sure to fall on the wicked, and offers, as further proof, signs she herself has experienced.