கம்பராமாயணம் 5155 · சுந்தர 4.39

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!

பொருள் · Meaning in Tamil

துயில் இலை - நீ உறங்குவது இல்லை; ஆதலின் - ஆகையினால் (உனக்கு); கனவு தோன்றல - கனவுக் காட்சிகள் தெரிவதில்லை; அயில் விழி அனைய கண் அமைந்து - கூரிய வேல் போன்ற கண்கள் மூடுதலாலே; நோக்கினேன் - கனவுக் காட்சிகளைக் கண்டேன்; பழுதின் நாடு - குற்றத்துக்கு உறைவிடமான இந்நாட்டில்; பயில்வன - அந்தக் கனவில் நிகழ்ந்தவை, பழுது இல - குற்றம் அற்றவை; பண்பு தூயன - பண்பால் தூய்மை பெற்றவை, வெயிலினும் - சூரியனை விட; மெய்யன - உண்மையுடையவை (அதனை) விளம்பக் கேட்டி - சொல்லக் கேள்.

அயில்விழி - கண் என்னும் பொருட்டாய் நின்றது. வேற்கண் கண்ணென்னும் மாத்திரை என்று உரை வகுத்தார் நச்சர். 'துயில் அலை' என்னும் பாடம் சிறக்கும் போலும். (சிந். 1487) 'மெய்யன' என்பது பாடமானால், உதயமாதலும் அஸ்தமித்தலும் தப்பாதுடைய சூரியன் போல் தப்பாது பலிக்கும் அவைகள். நான் கண்ட சொப்பன வகைகள் என ஆம் (வி.கோ. பிள்ளை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You do not sleep, and so no dreams appear to you;
  2. but my eyes, sharp as spear-points, closed, and I saw them.
  3. What came to me were flawless, in this land that is home to wrong;
  4. truer than sunlight — hear me tell them!'

What the poem says

Tiricaṭai explains why she, and not Cītai, has had dreams: Cītai never sleeps in her grief, while Tiricaṭai closed her eyes and dreamed.

She insists that what she saw, though seen in a land full of wickedness, is free of error and as certain as the sun's daily rising and setting. Her prophetic dream of Laṅkā's ruin follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuyil ilai ātaliṉ kaṉavu tōṉṟala;
ayil viḻi aṉaiya kaṇ amaintu nōkkiṉēṉ:
payilvaṉa paḻutu ila paḻutiṉ nāṭu eṉa
veyiliṉum meyyaṉa viḷampak kēṭṭiyāl!