கம்பராமாயணம் 5156 · சுந்தர 4.40

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தெனபுலம்; நவை இல் கற்பினாய்!

பொருள் · Meaning in Tamil

நவை இல் கற்பினாய் - குற்றமற்ற கற்புடைய பிராட்டியே; அண்ணல் வேல் இராவணன் - சிறந்த வேலேந்திய இராவணன்; பொன்முடிதொறும் எண்ணெய் இழுகி - அழகிய பத்துத்தலைகளிலும் எண்ணெய்பூசிக்கொண்டு; இரத்த ஆடையன் - சிவந்த ஆடையை அணிந்தவனாய்; கழுதை பேய் பூண்ட - கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற; ஈறு இலா - சென்று சேரும் இறுதியை அறியாத; திண் நெடும் தேரின் மேல் - திண்மையான பெரிய தேரிலே (ஏறி); தென் புலம் நண்ணினன் - தெற்குத் திசையை அடைந்தான்.

வாள் அரக்கன் என்று திருமுறைகள் பேசும். கம்பரும் அங்ஙனமே கூறுவார். கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லல் தென் திசையில் போதல் முதலியன கேட்டுக்கு அறிகுறி. வால்மீகத்தில் திரிசடை அரக்கியர்பால் கூறுகிறாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Oil smeared on every one of his golden crowned heads,
  2. on an endless, strong, tall chariot yoked with donkeys and ghouls,
  3. Irāvaṇaṉ of the lordly spear, dressed in blood-red cloth,
  4. went off to the south — O you of flawless chastity!'

What the poem says

Tiricaṭai begins her dream. She saw Irāvaṇaṉ, his ten heads smeared with oil, dressed in red, riding a great chariot drawn by donkeys and demons, heading south.

Each detail is a classic omen of death: oil on the head, red clothing, a chariot ride and the southern direction, which is the realm of Yama, god of death. In Vālmīki's version Tiricaṭai tells this dream to the ogresses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṇṇey poṉ muṭitoṟum iḻuki īṟu ilāt
tiṇ neṭuṅ kaḻutai pēy pūṇṭa tēriṉmēl
aṇṇal vēl irāvaṇaṉ aratta āṭaiyaṉ
naṇṇiṉaṉ teṉpulam; navai il kaṟpiṉāy!