கம்பராமாயணம் 5157 · சுந்தர 4.41

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மக்களும் சுற்றமும் மற்று உளோர்களும்
புக்கனர் அப்புலம் போந்தது இல்லையால்!
சிக்கு அற நோக்கினன்! தீய இன்னமும்
மிக்கன கேட்க! 'என விளம்பல் மேயினாள்.

பொருள் · Meaning in Tamil

மக்களும் சுற்றமும் - இராவணனின் புதல்வர்களும் உறவினர்களும்; மற்று உளார்களும் - மற்றைய அரக்கர்களும்; அப்புலம் புக்கனர் - அந்தத் தென்திசையை அடைந்தனர்; போந்தது இல்லை - (அவர்கள்) திரும்பிவரவில்லை; சிக்கு அற நோக்கினென் - (இதனை) குழப்பமின்றிப் பார்த்தேன்; இன்னமும் - மேலும்; மிக்கன தீய - மிகுதியான தீமை விளைவிக்கும் கனவுக் காட்சிகளை; கேட்க என - கேட்பாயாக என்று; விளம்பல் மேயினாள் - சொல்லத் தொடங்கினாள்.

போந்தது என்பது புகுந்தது என்பதன் மாற்று வடிவம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'His sons, his kin and all the others besides
  2. went into that region, and none came back!
  3. I saw it clearly, without confusion. Hear now
  4. still more evil things,' and she went on speaking.

What the poem says

In the dream, Irāvaṇaṉ's sons, relatives and the rest of the demons followed him to the south, the land of death, and none of them returned.

Tiricaṭai stresses that she saw this plainly, and goes on to describe still darker omens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'makkaḷum cuṟṟamum maṟṟu uḷōrkaḷum
pukkaṉar appulam pōntatu illaiyāl!
cikku aṟa nōkkiṉeṉ! tīya iṉṉamum
mikkaṉa kēṭka! 'eṉa viḷampal mēyiṉāḷ.