கம்பராமாயணம் 5159 · சுந்தர 4.43

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்
இடிபட முழங்கின இரட்டல் இன்றியே;
தடி உடை முகில் குலம் இன்றித் தாவு இல் வான்
வெடிபட அதிருமால் : உதிரும் மீன் எலாம்!

பொருள் · Meaning in Tamil

பிடி - பெண் யானைகட்கு, மதம் பிறந்தன - மதப் புனல் தோன்றின; பிறங்கு பேரியும் - விளக்கமான பெரு முரசங்களும்; இரட்டல் இன்றியே - (வீரர்களால்) மாறி மாறி அடிக்கப்படாமல்; இடியென முழங்கும் - இடியைப் போல (தாமே) முழங்கும்; தடி உடை முகிற் குலம் இன்றி - மின்னலுடன் கூடிய மேகக் கூட்டம் இல்லாமலேயே; தாவு இல் வான் - நீக்கம் அற்ற ஆகாயம்; வெடி பட அதிரும் - (அண்டங்கள்) பிளவு படும்படி அதிரும்; மீன் எலாம் உதிரும் - எல்லா நட்சத்திரங்களும் சிதறி விழும்.

'பிடியெலாம்மதம் பெய்திட ... வான் இடியும் வீழ்ந்திடும்' (கம்ப. 2946) தாவு இல் - நீக்கம் அற்ற. 'யானை தாவரும் திசையில் நின்று சலித்திட' (கம்ப. 7328) இரண்டு கோல்களால் மாறி மாறி அடிப்பதை இரட்டல் என்பர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Musth has broken out in the cow-elephants; the great war-drums
  2. roar like thunder though no one beats them;
  3. with no host of lightning-clouds, the boundless sky
  4. booms as if to burst apart, and all the stars fall!'

What the poem says

Tiricaṭai lists unnatural portents. Female elephants, which never go into musth, are streaming with it; the great drums thunder of their own accord, with no drummers striking them in turn.

The cloudless sky cracks with thunder and the stars rain down. Such reversals of nature foretell disaster for the city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'piṭi matam piṟantaṉa; piṟaṅku pēriyum
iṭi eṉa muḻaṅkumāl iraṭṭal iṉṟiyē;
taṭiyuṭai mukiṟ kulam iṉṟit tāvu il vāṉ
veṭipaṭa atirumāl: utirum mīṉ elām!