கம்பராமாயணம் 5160 · சுந்தர 4.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில் - ஒளியொடு கூடிய; பகல் இன்றி - பகற்காலம் இல்லாமல் (இரவில்); இரவு விண்டு அற - இருள் நீங்கி ஒழியும்படி; எல்பகல் எறித்துளது என்ன - சூரியன் பகலிலே ஒளியைப் பரப்புவது போல்; தோன்றும் - காட்சி தரும்; மல்பக - (எதிர்த்த) மல்லர்கள் பிளவு படும்படி; மலர்ந்த தோள் மைந்தர் - விரிந்த தோள்களையுடைய வீரர்கள்; சூடிய - அணிந்த; கற்பக மாலையும் - (தெய்வத்தன்மையுடைய) கற்பக மலரால் கட்டப் பெற்ற மாலையும், புலவு காலும் - புலால் நாற்றம் வீசும்.
இரவில் உண்டாகும் ஒளியும், மாலை புலால் நாற்றம் வீசுவதும் கேட்டுக்கு அறிகுறி. கற்பகம் தெய்வத்தன்மை உடையது. அதில் புலால் நாற்றம் வீசுவது அதிசயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though there is no bright day, the night breaks and vanishes
- and it looks as if the sun were blazing in full daylight!
- Even the garlands of the wishing-tree, worn by warriors whose broad shoulders
- crush wrestlers, give off the stench of raw flesh!'
What the poem says
Two more evil signs: at night the darkness splits open and it seems as bright as noon, and the garlands of flowers from the heavenly kaṟpakam tree, worn by the mighty demon warriors, reek of flesh.
The kaṟpakam is a divine wish-granting tree whose flowers should be fragrant forever, so their stench of carrion is a portent of slaughter.