கம்பராமாயணம் 5163 · சுந்தர 4.47

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'விண் தொடர் மதியினைப் பிளந்து மீன் எழும்;
புண் தொடர் குருதியில் பொழியுமால் மழை;
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற!

பொருள் · Meaning in Tamil

மீன் - நட்சத்திரங்கள்; விண்தொடர் மதியினைப் பிளந்து - ஆகாயத்தில் செல்லும் சந்திரனைப் பிளந்து கொண்டு; எழும் - மேலே போகும்; மழை - ஆகாயத்தை மூடிய மேகம்; தொடர்புண்குருதி - ஆறாத புண்ணின் இரத்தத்தை; பொழியும் - கொட்டும்; தண்டு திகிரி வாள் தனு என்று இன்னன - தண்டாயுதம், சக்கரம், வாள், வில் என்று பேசப்படுகிற (திருமாலின்) ஆயுதங்கள்; ஆழி மாறு உற - கடல்கள் ததும்பிக் கொந்தளிக்க; மண்டு அமர் புரியும் - நெருங்கிப் போர் செய்யும்.

'மண்டு அமர்புரியும்' எனவே ஏவுவார் இன்றி படைகள் தாமே போர் செய்யும் என்க. ஆல் - அசை குருதி - இன் - பொழியும். இன் - அசை தண்டொடு என்பதில் உள்ள ஒடு அசை. போது பொதுள என்பதைப் 'போதொடு பொதுள' என்று குறுந்தொகை பேசும் (குறுந். 155.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Stars split the moon that travels through the sky and rise up;
  2. the clouds pour down rain like blood from wounds;
  3. mace and discus, sword and bow and the like
  4. wage crowded war as the oceans heave in turmoil!'

What the poem says

The heavens themselves are disordered: stars burst through the moon, and the clouds rain blood as from open wounds.

The weapons of Tirumāl, mace, discus, sword and bow, fight a fierce battle by themselves with no hand to wield them, while the seas churn. The image foreshadows the war in which Irāmaṉ, Tirumāl incarnate, will destroy Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viṇ toṭar matiyiṉaip piḷantu mīṉ eḻum;
puṇ toṭar kurutiyiṉ poḻiyumāl maḻai;
taṇṭoṭu tikiri vāḷ taṉu eṉṟu iṉṉaṉa
maṇṭu amar puriyumāl āḻi māṟu uṟa!