கம்பராமாயணம் 5164 · சுந்தர 4.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மங்கையர் மங்கலத் தாலி மற்று அவர்
அம் கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால்!
பொருள் · Meaning in Tamil
மங்கையர் - அரக்கிகளின்; மங்கலத்தாலி - மங்களத்தை விளைவிக்கும் தாலிகள்; அங்கையில் வாங்குநர் மற்றவர் எவரும் இன்றி - கைகளால் அறுப்பவர்கள் பிறர் எவரும் இல்லாமல் (தாமாகவே); குறித்த ஆற்றினால் - தீய அடையாளங்கள் என்று கூறப்பட்டபடி; கொங்கையில் விழுந்தன - மார்பில் வீழ்ந்தன; இங்கு - இந்த இலங்கையில் (நிகழ்ந்த); இதின் அற்புதம் - (இந்தக்) கனாக் காட்சியின் அதிசயத்தை; இன்னும் கேட்டி - மேலும் கேட்பாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The sacred marriage-threads of the women, though no other
- hand was there to take them off,
- fell from their breasts, just as the omens foretold;
- hear still more of the wonder seen here!'
What the poem says
Tiricaṭai sees the tāli, the sacred wedding pendant worn by married women, slipping off the necks of the demon wives with no one removing it.
A tāli is taken off only when a woman is widowed, so this omen foretells the death of the demon husbands. Tiricaṭai promises yet more marvels.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṅkaiyar maṅkalat tāli maṟṟaiyōr
aṅkaiyiṉ vāṅkunar evarum iṉṟiyē
koṅkaiyiṉ vīḻntaṉa; kuṟitta āṟṟiṉāl
iṅku itiṉ aṟputam iṉṉum kēṭṭiyāl!