கம்பராமாயணம் 5167 · சுந்தர 4.51

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வரம்பு இலா மதகரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
குரம்பு அறு பிணம் படக் கொன்று மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால்!

பொருள் · Meaning in Tamil

வரம்பு இலா - கட்டுப்பாடு என்பது இல்லாத; மத கரி உறையும் - மதயானைகள் வாழ்கின்ற, அவ்வனம் - அந்த வனம் (சிங்கங்கள்); நிரம்பு உற - முடிதல் அடைய; வளைத்தன - சுற்றிக் கொண்டன; நெருக்கி நேர்ந்தன - நெருக்கிப் போர் செய்தன (அப்போது); வரம்பு அறு - எல்லையற்ற, பிணம்படக் கொன்று - பிணங்கள் விழும்படிக் கொன்று; மாறு இலா - பகைமையில்லாத; புரம்புக - தம்முடைய நகரை அடைவதற்காக, இருந்தது ஓர்மயிலும் - அங்கே தங்கியிருந்த ஓர் மயிலும்; போயது - வெளிப் போயது.

வனம் - இலங்கை. இரண்டு சிங்கங்கள் - இராமலக்குவர்கள். மயில் - பிராட்டி. மாறிலாப் புரம் - அயோத்தி. இவை கனவின் குறிப்புகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '— they surrounded that forest, home of countless rutting elephants,
  2. on every side, and pressed in to fight;
  3. they killed until corpses lay without number, and a peahen
  4. who had been staying there left for a city free of enmity!'

What the poem says

The dream continues: the lions and tigers ringed the forest where unruly rutting elephants lived, attacked, and killed them in countless numbers. Then a peahen who had been kept in that forest went away to a peaceful city.

The commentary decodes the allegory: the forest is Ilaṅkai, the elephants the demons, the two lions Irāmaṉ and Ilakkuvaṉ, the peahen Cītai, and the city without enemies Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varampu ilā matakari uṟaiyum av vaṉam
nirampuṟa vaḷaintaṉa nerukki nērntaṉa
varampu aṟu piṇam paṭak koṉṟu māṟu ilāp
puram puka iruntatu ōr mayilum pōyatāl!