கம்பராமாயணம் 5171 · சுந்தர 4.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அ வயின் - அந்தச்சமயத்தில்; அரக்கியர் - (காவலாய் உள்ள) அரக்கிமார்கள்; அறிவுற்று - உறக்கம் தெளிந்து; அம்மவோ - அந்தோ (ஐயோ); இங்கு ஈது - இவ்விடத்தில் இப்படி; செவ்வை இல்துயில் - சிறப்புத் தராத உறக்கம்; நமை செகுத்தது - நம்மைக் கெடுத்து விட்டதே; எனா - என்று கூறி; எவ் வயின் மருங்கினும் - எல்லாப் பக்கங்களிலும்; எழுந்து - எழுந்திருந்து; வெவ் அயில் - கொடிய வேலையும்; மழு - கோடாலியையும்; எழு - வளை தடியையும்; சூலம் - சூலத்தையும் (ஏந்திய); வெம் கையார் - கொடிய கைகளையுடையவராய்; வீங்கினார் - நெருங்கினார்கள்.
வீங்குதல் - நெருக்குதல் - கலாபம் வீங்க (சிந் 840) என்னும் தொடருக்கு வகுத்த உரை நோக்கத் தக்கது. செகுத்த தீங்கு எனப் பிரித்து, தீங்கு செகுத்த என்றும் உரை கூறலாம். அப்போது செகுத்தது என்பது செகுத்த என்று வந்தது; விகாரம் என்று கொள்க. ஒருமை பன்மை மயக்கம் என்று கொள்ள இடம் தரின் கொள்க. நச்சினார்க்கினியர் 'வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ' (சிந். 2.93) என்னும் தொடரை ஒருமை பன்மை மயக்கம் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the ogresses woke and cried, 'Alas!
- This wretched sleep has undone us here!'
- and from every side they rose and crowded in,
- their cruel hands gripping fierce spears, axes, clubs and tridents.
What the poem says
Just as Aṉumaṉ catches sight of Cītai, the ogress guards wake with a start, alarmed that they have neglected their watch.
Seizing spears, axes, iron clubs and tridents, they rise on every side and close in around her. The commentary discusses grammatical alternatives for the phrase about sleep having ruined them.