கம்பராமாயணம் 5172 · சுந்தர 4.56

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடையிடை யானை யாளி பேய்
துயில்கொள் வெம் பிலன் எனத் தொட்ட வாயினார்.

பொருள் · Meaning in Tamil

(அந்த அரக்கிமார்கள்)

வயிற்றிடை வாயினர் - வயிற்றிலே வாயை உடையவர்கள்; வளைந்த நெற்றியில் - முன் நோக்கி வளைந்துள்ள நெற்றியிலே; குயிற்றிய விழியினர் - பதிக்கப் பெற்ற கண்களை உடையவர்கள்; கொடிய நோக்கினர் - கொடிய பார்வை உடையவர்கள்; எயிற்றினுக்கு இடையிடை - பற்களுக்கு நடுவில் நடுவில்; யானை, யாளி, பேய் - யானைகளும் யாளிகளும், பேய்களும்; துயில் கொள் - உறங்குகின்ற; வெம்பிலன் என - கொடிய மலைக்குகை போல; தொட்ட வாயினர் - பெரிய வாயை உடையவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They had mouths in their bellies; eyes set
  2. in their bulging foreheads; cruel glares;
  3. and gaping mouths like dreadful caverns where, between
  4. tooth and tooth, elephants, yāḷis and ghouls lay asleep.

What the poem says

Kampaṉ begins a portrait of the ogresses guarding Cītai, seen through Aṉumaṉ's eyes. Some have mouths in their stomachs, others eyes set into jutting foreheads, and all have savage stares.

Their mouths are so huge that they are compared to cruel mountain caves in which elephants, yāḷis, mythical lion-like beasts, and demons could sleep between the teeth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayiṟṟiṭai vāyiṉar; vaḷainta neṟṟiyil
kuyiṟṟiya viḻiyiṉar; koṭiya nōkkiṉar;
eyiṟṟiṉukku iṭai iṭai yāṉai yāḷi pēy
tuyilkoḷ vem pilaṉ eṉat toṭṭa vāyiṉar.