கம்பராமாயணம் 5173 · சுந்தர 4.57

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒருபது கையினர் ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர் இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர்;
பருவரை எனமுலை பலவும் நாற்றினார்.

பொருள் · Meaning in Tamil

(அரக்கிகள்)

ஒருபதுகையினர் - பத்துக் கைகளை உடையவர்கள் (ஆனால்); ஒற்றைச் சென்னியர் - ஒரு தலையைப் பெற்றவர்கள்; இருபது தலையினர் - இருபது தலைகளை உடையவர்கள் (ஆனால்); இரண்டு கையினர் - இரண்டுகைகளைப் பெற்றவர்கள்; வெருவரு தோற்றத்தர் - அச்சத்தை உண்டுபண்ணும் தோற்றம் உடையவர்கள்; விகட வேடத்தர் - மாறுபட்ட கோலத்தைப் பூண்டவர்கள்; பருவரை என - பருத்த மலைபோல; முலை பலவும் - இரண்டுக்கு மேற்பட்ட முலைகளை; நாற்றினர் - தொங்கவிட்டுக் கொண்டிருப்பவர்கள்.

சில என்பது இரண்டையும், பல என்பது இரண்டுக்குமேற்பட்டவற்றையும் குறிக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some had ten arms but a single head;
  2. some had twenty heads but only two arms;
  3. fearsome to look upon, grotesque in their garb,
  4. they hung out many breasts like massive hills.

What the poem says

The description of the guards continues with deliberate grotesquerie: ten arms on one head, twenty heads on two arms, a terrifying and absurd appearance.

They have more than two breasts each, hanging like great hills. The commentary notes that in Tamil usage 'some' means two and 'many' means more than two.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1orupatu kaiyiṉar oṟṟaic ceṉṉiyar;
irupatu talaiyiṉar iraṇṭu kaiyiṉar;
veruvaru tōṟṟattar vikaṭa vēṭattar;
paruvarai eṉa mulai palavum nāṟṟiṉar.