கம்பராமாயணம் 5174 · சுந்தர 4.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூலம் வாள் சக்கரம் - சூலத்தையும் வாளையும் சக்கரத்தையும், தோட்டி தோமரம் - அங்குசத்தையும் இருப்புலக்கையையும்; காலவேல் கப்பணம் - காலனை ஒத்த வேலையும் கப்பணத்தையும்; (பிரயோகிப்பதற்கு) கற்ற கையினர் - அறிந்த கையை உடையவர்; உருவு கொண்ட - வடிவம் எடுத்த; ஆலம் அனைய மேனியர் - விடம் போன்ற உடம்பைப் பெற்றவர்கள்; பாலம் தரித்தவன் - மழுவைத் தரித்த சிவபிரானும்; வெருவும் - அஞ்சும் படியான; பான்மையர் - இயல்பைப் பெற்றவர்கள்.
தோமரம் - இருப்புலக்கை தோட்டி - (யானையை அடக்கும்) அங்குசம், கப்பணம் - யானை நெரிஞ்சி முள் போன்ற ஆயுதம். யானைகள் வராதபடி இது போர்க்களத்தில் பரப்பப் பெறும். கப்பணம் சிதறினானே என்பர் தேவர் (சிந்-285) மதுரைக் காஞ்சி இதைப் பரல் என்று கூறும் (597, 98) பாலம் - மழு. பரசு --- பாலம் என்றைந்தும் மழுவின் பெயரே. (திவாகரம் - செயற்கை 3) பாலம் - கபாலம். முதற்குறை என்பர் (அடை - பதி) கபாலம் தரித்தவன் வைரவ மூர்த்தி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Trident, sword, discus, goad, iron club,
- deadly spear and caltrop — their hands were trained in all;
- their bodies were like poison itself taking form;
- such was their nature that even He who bears the axe would fear them.
What the poem says
The ogresses are expert with every weapon: tridents, swords, discs, elephant-goads, iron bars, spears deadly as Death, and the kappaṇam, a spiked caltrop scattered on battlefields to stop elephants.
Their bodies look like the dark poison that rose from the churned ocean, and they are so terrifying that even Civaṉ, the bearer of the axe, would shrink from them. Some read the word as 'skull' instead, making the god Vairavaṉ, who carries a skull-bowl.