கம்பராமாயணம் 5175 · சுந்தர 4.59

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரி பரி வேங்கை மாக் கரடி யாளி பேய்
அரி நரி நாய் என அணி முகத்தினர் :
வெரிந் உறு முகத்தினர் : விழிகண் மூன்றினர் :
புரிதரு கொடுமையர் : புகையும் வாயினார்.

பொருள் · Meaning in Tamil

(அரக்கிகள்)

கரிபரி வேங்கை - யானை, குதிரை, வேங்கைப்புலி; மாக் கரடி யாளிபேய் - பெருங்கரடி, யாளி, பேய்; அரி நரி நாய் என - சிங்கம், நரி, நாய் என்று கூறும்படி; அணி - (தங்கள் இயல்புக்கேற்ப) பொருந்திய; முகத்தினர் - முகத்தையுடையவர்கள்; வெரிந் உறு - முதுகில் அமைந்த; முகத்தினர் - முகத்தை உடையவர்கள்; விழிகள் மூன்றினர் - மூன்று கண்களையுடையவர்கள்; புரி தரு கொடுமையர் - விரும்பி மேற் கொண்ட கொடிய இயல்பை உடையவர்கள்; புகையும் வாயினர் - புகையை வெளிப்படுத்தும் வாயைப் பெற்றவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Elephant, horse, tiger, great bear, yāḷi, ghoul,
  2. lion, jackal, dog — such were the faces they wore;
  3. some had faces on their backs; some had three eyes;
  4. cruel by choice, with mouths that smoked.

What the poem says

The catalogue of the guards goes on. Their faces are those of beasts: elephants, horses, tigers, bears, mythical yāḷis, demons, lions, jackals and dogs.

Some have faces on their backs and some three eyes. They delight in cruelty, and smoke issues from their mouths.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kari pari vēṅkai māk karaṭi yāḷi pēy
ari nari nāy eṉa aṇi mukattiṉar:
verin uṟu mukattiṉar: viḻikaḷ mūṉṟiṉar:
puritaru koṭumaiyar: pukaiyum vāyiṉar.