கம்பராமாயணம் 5177 · சுந்தர 4.61

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும்
தீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள் :
நாயகன் தூதனும் விரைவின் நண்ணினான்
ஓய்விலன் உயர்மரப் பணையின் உம்பரான்.

பொருள் · Meaning in Tamil

ஆயிடை - அவ்விடத்தில்; அழகன் தேவியும் - இராமபிரானின் தேவியாகிய பிராட்டி; உரை அவிந்து - பேச்சு ஒடுங்கி; தீ அனையவர் முகம் - நெருப்புப் போன்ற அரக்கிகளின் முகங்களை; நோக்கி - பார்த்து; தேம்பினாள் - மனங் கலங்கினாள் (அப்போது); நாயகன் தூதனும் - இராமபிரானின் தூதனான அனுமனும்; ஓய்விலன் - தாமதிக்காமல்; விரைவில் நண்ணினான் - வேகமாக வந்து (பிராட்டியிருந்த); உயர் - உயர்ந்த; மரப் பணையின் உம்பரான் - மரக்கிளையை அடைந்தவன் ஆனான்.

பிராட்டி இருந்த மரம் சிஞ்சுகமரம் என்று கூறுகின்றனர். சிஞ்சுகம் - நூக்கம் என்று அகராதி பேசும். சிஞ்சுகம் அசோகம் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the consort of the Beautiful One fell silent,
  2. looked at the faces of those fire-like creatures, and wilted;
  3. and the messenger of her lord, without pause, came swiftly
  4. and settled high on a branch of a lofty tree.

What the poem says

As the ogresses close in, Cītai stops speaking with Tiricaṭai and shrinks in fear at their fiery faces.

At the same moment Aṉumaṉ, Irāmaṉ's messenger, moves quickly and without delay to a high branch of the tree under which Cītai is sitting, so that he can watch closely. Tradition names that tree the ciñcukam, perhaps the aśoka itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai urai avintu aḻakaṉ tēviyum
tī aṉaiyavar mukam nōkkit tēmpiṉāḷ:
nāyakaṉ tūtaṉum viraivil naṇṇiṉāṉ
ōyvilaṉ uyarmarap paṇaiyiṉ umparāṉ.