கம்பராமாயணம் 5178 · சுந்தர 4.62

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் : மற்று இதற்கு ஏது என்? 'எனப்
பொருக்கென அவர் இடை பொருந்த நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

அரக்கியர் - அரக்கிமார்கள்; அயில் முதல் ஏந்தும் - வேல் முதலான ஆயுதங்கள் ஏந்திய; அங்கையர் - கையை உடையவராய்; நெருக்கிய குழுவினர் - அடர்ந்த கூட்டத்தினராய்; துயிலும் நீங்கினர் - உறக்கத்திலிருந்து எழுந்தவராய்; இருக்குநர் - இருக்கின்றார்கள்; இதற்கு ஏது என் எனா - (இவ்விரவில்) இவ்வாறு இருப்பதற்குக் காரணம் யாது என்று ஆராய்ந்து; பொருக்கென - விரைவாக; அவர் இடை - அவ் வரக்கியர்களுக்கு நடுவே; பொருந்த நோக்கினான் - உற்றுப் பார்த்தான்.

இரவிலே அரக்கியர்கள் ஆயுதங்கள் ஏந்தியபடி உறங்காமல் உள்ளனர். இதற்குக் காரணம் யாது என்று கருதி கூர்ந்து பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Ogresses, spears and other weapons in their hands,
  2. in a close-packed crowd, roused from their sleep,
  3. are sitting here — what can be the reason for this?' he thought,
  4. and quickly he looked hard into their midst.

What the poem says

Aṉumaṉ wonders why a crowd of armed ogresses should be awake and gathered so densely here in the middle of the night.

Suspecting they are guarding something precious, he peers intently into the centre of the group.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arakkiyar ayil mutal ēntum aṅkaiyar
nerukkiya kuḻuviṉar tuyilum nīṅkiṉar
irukkunar: maṟṟu itaṟku ētu eṉ? 'eṉā
porukkeṉa avariṭaip porunta nōkkiṉāṉ.