கம்பராமாயணம் 5179 · சுந்தர 4.63

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை!

பொருள் · Meaning in Tamil

ஒரு தனி - ஒப்பற்ற சிறப்புற்ற; குரு நிறத்து - ஒளி பொருந்திய நிறத்தை உடைய; கொண்டல் - மேகம் போன்ற; ஊழியான் - யுகத்தின் தலைவனாகிய இராமபிரானின்; இருநிறத்து உற்ற - பெரிய மார்பிலே தைத்த; வேற்கு - பிரிவுத் (துன்பமாகிய) வேலைப் பறித்தெடுக்கும்; இயைந்த காந்தத்தை - பொருந்திய காந்தமாமணி போன்ற பிராட்டியை; கருநிறத்து அரக்கியர் குழுவில் - கரு நிறத்தைப் பெற்ற அரக்கிமார்களின் கூட்டத்தில்; விரிமழைக்குலம் - பரந்த மேகக் கூட்டத்தை; கிழித்து ஒளிரும் - பிளந்து கொண்டு விளங்குகின்ற; மின் என - மின்னலைப் போல; கண்டனன் - பார்த்தான்.

மார்பில் பாய்ந்த இரும்புத் துண்டுகளை எடுக்கப் பயன்படும் காந்தம் போல இராமனின் துன்பம் நீக்கும் பிராட்டி என்க. "வரம் எனும் அயில்வேல் --- இப்பொழுது அகன்றது. குலப்பூண் --- ஆரம் ஆம் காந்தமாமணி இன்று வாங்க" எனும் தசரதன் மொழியைக் காண்க (கம்ப. 10068) கொண்டல் ஊழி - ஓர் ஊழி போலும் - பரிபாடல் கொண்டும், புராண வழக்குக் கொண்டும் ஆய்தல் வேண்டும். 'இரு நிறத்துற்ற வெற்கு இயைந்த காந்தத்தை' என்ற சுவடிப்பாடம் கொண்டு முன்னுள்ளோர் பலரும் உரை தடுமாறினர் - 'வேற்கு' எனச் சுவடி எழுத்தின் உண்மைகாட்டி உரை கண்டார் வாகீசகலாநிதி. கி.வா. ஜகந்நாதன் அவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like lightning that tears through a spreading mass of cloud and shines,
  2. he saw, amid the crowd of dark-skinned ogresses,
  3. the lodestone fit to draw out the spear lodged in the broad chest
  4. of the peerless Lord of the ages, bright-hued as a raincloud!

What the poem says

At last Aṉumaṉ sees Cītai among the dark ogresses, like a flash of lightning splitting a bank of black cloud.

She is called a magnet, the one thing that can draw out the spear of separation lodged in Irāmaṉ's heart, just as a lodestone pulls iron fragments from a wound. The commentary notes that older interpreters stumbled over a misread manuscript word here until the reading 'for the spear' was established.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viri maḻaikkulam kiḻittu oḷirum miṉ eṉak
karuniṟattu arakkiyar kuḻuvil kaṇṭaṉaṉ
kuruniṟattu oru taṉik koṇṭal ūḻiyāṉ
iru niṟattu uṟṟa vēṟku iyainta kāntattai!