கம்பராமாயணம் 5180 · சுந்தர 4.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடல் துணை நெடிய - கடல்போலப் பரந்துள்ள; தன் கண்ணின் நீர் - தன்னுடைய கண்ணிலிருந்து வழிந்த நீர் நிரம்பிய; பெருந் தடத்து இடை - பெரிய தடாகத்தின் நடுவில்; இருந்தது - இருந்த; ஓர் அன்னத் தன்மையள் - ஒப்பற்ற அன்னத் தன்மை எ. கடக்க அரும் - கடந்து போக முடியாத, அரக்கியர் - அரக்கிகளின்; காவற் சுற்றுளாள் - காவற் சுற்றிலே அகப்பட்டுள்ளாள் (ஆதலால், இவள்); மடக்கொடி - இளங்கொடி போன்ற; சீதை ஆம் - சீதையாகிய; மாதரே கொல்? - பெண்ணே போலும்.
கொல் என்பதை அசையாக்கி மாதரே ஆம் என்று பொருள் கொள்வாரும் உளர். அடுத்துவரும் பாடல்தான் அனுமனின் ஐயத்தைப் போக்குகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'She is ringed by a guard of ogresses that none can pass!
- Can she be the lady Cītai, tender as a young creeper?
- She is like a swan sitting in the middle of a great pool
- filled by the tears of her own eyes, vast as the sea!'
What the poem says
Aṉumaṉ reasons with himself. A woman kept inside so impenetrable a guard of ogresses must surely be Cītai.
He sees her as a lone swan floating in a lake as wide as the ocean, a lake formed from her own tears. The next verse settles his doubt.