கம்பராமாயணம் 5181 · சுந்தர 4.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அரக்கியர் நடுவில் இருப்பவர் பால்)
எள் அரும் - பழிப்பற்ற; உருவின் - திருமேனியின்கண்; அவ் இலக்கணங்களும் - நல்ல சாமுத்திரிகா லட்சணங்களும்; வள்ளல் தன் உரையொடு - இராமனின் மொழிகளோடு; மாறு கொண்டில - வேறுபட்டிருக்கவில்லை. (ஆகையால் இவள் சீதையே); கள்ளவாள் அரக்கன் - வஞ்சனையும் கொடுமையுமுடைய இராவணன்; அக்கமலக் கண்ணனார் - அந்த தாமரை போன்ற கண்களைப் பெற்ற இராமபிரான்; உள் உறை உயிரினை - உள்ளத்தில் வாழும் உயிரை; ஒளித்து வைத்தவா - மறைத்து வைத்த கொடுமை எப்படிப்பட்டது.
வைத்த ஆறு என்பது வைத்தவா எனக் குறைந்து வந்துள்ளது 'என்னே நிருபன் இயற்கை இருந்தவா' (கம்ப. 1713)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The marks on her flawless form
- do not differ from the words of the generous lord!
- How has the treacherous, cruel demon hidden away
- the very life that dwells within that lotus-eyed one!'
What the poem says
Aṉumaṉ compares what he sees with the description Irāmaṉ gave him before he set out. The auspicious marks of her body match exactly, so this must be Cītai.
He marvels at the wickedness of Irāvaṇaṉ, who has hidden away the woman who is Irāmaṉ's very life.