கம்பராமாயணம் 5183 · சுந்தர 4.67

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! 'எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்)

உவகைத் தேன் உண்டான் - மகிழ்ச்சியாகிய தேனைக் குடித்து; அறன் வீடினது அன்று - தருமம் அழியவில்லை; யானும் வீகலேன் - யான் அழிய மாட்டேன்; தேடினென் - பிராட்டியைத் தேடிய யான்; கண்டனென் - கண்டு கொண்டேன்; தேவியே - (இவள்) சீதாதேவியே; எனா - என்று கூறி; ஆடினன் பாடினன் - ஆடிப் பாடினான்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து - அங்கும் இங்கும் பாய்ந்து; ஓடினன் உலாவினன் - ஓடி உலாவினான்.

முன்பு பிராட்டியைக் காணாதபோது வீடுவேன் (காட்சி /) (இறப்பேன்) என்றவன் பிராட்டியைக் கண்டதும் வீகலேன் (இறவேன்) என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Dharma has not perished! Nor shall I perish!
  2. I searched and I have found her — it is the queen herself!' he cried,
  3. and he danced and he sang, leapt here and there,
  4. ran and roamed about, drunk on the honey of joy.

What the poem says

Certain now that he has found Cītai, Aṉumaṉ is overwhelmed with delight.

Earlier, when his search seemed hopeless, he had resolved to die; now he declares that righteousness has not been destroyed and neither will he. Like the monkey he is, he dances, sings and leaps about the branches, intoxicated with joy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vīṭiṉatu aṉṟu aṟaṉ! yāṉum vīkalēṉ!
tēṭiṉeṉ kaṇṭaṉeṉ tēviyē! 'eṉā
āṭiṉaṉ pāṭiṉaṉ āṇṭum īṇṭum pāyntu
ōṭiṉaṉ ulāviṉaṉ uvakait tēṉ uṇṭāṉ.