கம்பராமாயணம் 5184 · சுந்தர 4.68

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்த்
தேசு உண்ட திங்களும் என்னத் தேய்ந்து உளாள்!
காசு உண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்ட இல்லையால்! அறத்துக்கு ஈறு உண்டோ?

பொருள் · Meaning in Tamil

(அனுமன்)

மாசுண்ட மணிஅனாள் - அழுக்கால் மூடப்பெற்ற மணி போன்றவள்; வயங்கு - விளக்கமான; வெங்கதிர் - கொடுமையான சூரியனின்; தேசுண்ட - ஒளியால் மறைக்கப் பெற்ற; திங்கள் என்ன - சந்திரனைப் போல; தேய்ந்துளாள் - (ஒளி) குன்றியுள்ளாள்; காசுண்ட கூந்தலாள் - அழுக்குப் படிந்த கூந்தலையுடைய பிராட்டியின்; கற்பும் - உறுதிப்பாடும்; காதலும் - இராமன்பால் கொண்ட காதலும்; ஏசு உண்டது இல்லை - தாழ்ச்சியடையவில்லை; அறத்திற்கு(ம்) ஈறுண்டோ? - தருமத்திற்கும் அழிவுவருமா.

சீதையின் கற்புமுதலானவை தாழ்ச்சியுறவில்லை என்னும் சிறப்புக்கருத்தை தருமத்துக்கு ஈறுண்டோ என்னும் பொதுக் கருத்தால் உறுதிப்படுத்தலின் இது வேற்றுப் பொருள் வைப்பணி. விழுமணி மாசு மூழ்கிக் கிடந்தது என்பர் தேவர் (அந்தா)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'She is like a gem coated in grime; like the moon
  2. whose light has been swallowed by the blazing hot sun, she has wasted away!
  3. Yet the chastity and the love of this lady with matted, dusty hair
  4. have suffered no reproach! Can dharma ever come to an end?'

What the poem says

Aṉumaṉ looks closely at Cītai. She is like a jewel caked with dirt, or the moon washed pale by the daytime sun; her hair is matted and dusty.

Yet her chastity and her love for Irāmaṉ are untouched. He ends with a general truth that confirms the particular one, a figure the commentary identifies as arthāntaranyāsa: righteousness can never be destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mācuṇṭa maṇi aṉāḷ vayaṅku veṅ katirt
tēcuṇṭa tiṅkaḷum eṉṉat tēyntuḷāḷ!
kācuṇṭa kūntalāḷ kaṟpum kātalum
ēcuṇṭatu illaiyāl! aṟattukku īṟu uṇṭō?