கம்பராமாயணம் 5185 · சுந்தர 4.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கழல்புனை - வீரக்கழல் அணிந்த; இராகவன் பொன் புயத்தையோ - இராமபிரானின் அழகிய தோள்களையோ? வனிதையர் திலகத்தின் - பெண்களின் திலகம் போன்ற பிராட்டியின்; மனத்தின் மாண்பையோ - திருவுள்ளத்தின் மாட்சிமையையோ? கழல் வனை - வீரக்கழல் அணிந்த; அரசரின் - அரசர்களுக்குள்ளே; வண்மை மிக்கிடும் - கொடைப்பண்பால் உயர்ந்த; சனகர்தம் குலத்தையோ - சனகரின் குலத்தையோ; யாதைச் சாற்றுகேன் - எதைப் புகழ்வேன்.
ஒன்றின் ஒன்றுவிஞ்சி இருத்தலின் யான் எதைப் புகழ்வேன் என்றான். என்றாலும் மரபினும் புயம் உயர்ந்தது. புயத்தினும் மனம் உயர்ந்தது என்பதை அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I praise the golden shoulders of Irākavaṉ of the anklets?
- Or the greatness of heart of this jewel among women?
- Or the line of Caṉakaṉ, foremost in generosity
- among kings who wear warriors' anklets? Which shall I extol?'
What the poem says
Aṉumaṉ does not know where to begin his praise: Irāmaṉ's strong arms, which will rescue her; Cītai's steadfast heart, which has endured; or the noble line of Caṉakaṉ, most generous of kings, into which she was born.
Each surpasses the last, so he is at a loss. The commentary observes the rising order: the arm is greater than the lineage, and the heart greater than the arm.