கம்பராமாயணம் 5187 · சுந்தர 4.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேழ் இலாள் - ஒப்புமையற்ற பிராட்டியின்; நிறை இறை கீண்டது ஆம் எனில் - நிறையானது சிறிது சிதைந்தாலும், ஆழியான் - (சக்கரம் ஏந்திய) திருமாலாகிய இராமபிரானின்; முனிவு எனும் ஆழி - கோபம் என்னும் கடலானது; மீக்கொள - மேலே அதிகரித்துப் பொங்குதலால்; ஊழியின் இறுதி - யுகத்தின் முடிவுக்காலம்; வந்து உறும் என்று - வந்து விடுமே என்று; உன்னினேன் - எண்ணி அஞ்சினேன் (நிறை அழியாமையால்); இனி - இனிமேல்; உலகு - உலகங்கள்; வரம்பு இல் நாள்எலாம் - எல்லையற்ற எல்லா நாட்களிலும்; வாழிய - வாழ்வடைக.
நிறை - மனத்தைக் கட்டுப்படுத்தல். இறைவன் கோபம் கொள்ளாமல் 'பிராட்டி அடக்கி வெல்வாள்' என்று கூறுவர் சிலர். நிறை - கரை போன்றது. அன்றியும் மகளிரின் நால்வகைப் பண்புகளில் ஒன்றான நிறை என்றும் கூறலாம். கண்டது ஆம் என்று - ஆம் அசை. உன்னுதல் - அஞ்சுதல். காரியத்தைக் காரணமாகக் கூறப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Had the constancy of this peerless one been breached even a little,
- the ocean of wrath of the Bearer of the Discus would have risen high
- and the end of the age would have come upon us — so I feared.
- Long may the world live now, through days without end!'
What the poem says
Aṉumaṉ reflects that had Cītai's self-control and virtue given way even slightly, Irāmaṉ, who is Tirumāl the discus-bearer, would have unleashed his anger like a sea bursting its shores, and the world would have ended.
Because her steadfastness has held like a sea-wall, the world is safe, and he blesses it with endless life.