கம்பராமாயணம் 5208 · சுந்தர 4.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இழை புரைமருங்குல் - நூல் போன்ற இடை; இறும் இறும் எனவும் - முறியும் முறியும் என உணர்த்தவும்; இறுகலா - சுருங்காத; இரட்டை வனமுலை - இரட்டித்த அழகிய தனங்கள்; உழைபுகு - இரு பக்கங்களிலும்; செப்பின் - புகுந்த செப்புகளைப் போல, ஒளிதர - விளக்கமுற; மறைத்த - அவற்றை மறைக்கின்ற; உத்தரியத்தினர் - மேலாடை உடையவர்களாய்; ஒல்கி - அசைந்து; குழைபுகு - குண்டலங்கள் பொருந்திய, கமலம் - தாமரை போலும் முகத்தை, கோட்டினர் - வளைத்து; நோக்கும் - பார்க்கும், குறுநகை - புன்னகையும்; குமுதவாய் மகளிர் - குமுத மலர் போன்ற வாயையும் உடைய பெண்களின்; மழைபுரை - மேகத்தைப் போன்றதும்; செங்கடை - சிவந்த கடைப்பகுதிகளைக் கொண்டதும் (ஆகிய); ஒண்கண் - அழகிய கண்களின்; ஈட்டம் - தொகுதி; மார்பினும் - மார்பின்கண்ணும்; தோளினும் - தோள்களிலும்; மலைய - போர் செய்யவும்.
இறுகலா - சுருங்காத. இறுகல் உறப்பென்னும் ஞானிக்கும் (திருவாய் 4-/- 10) இறுகல் - சங்கோசம் (சுருங்கல்) திவ்யப் பிரபந்தம் அரும்பதவுரை 780 (பக்) திருவேங்கடத்தான் மன்றம். உழை - இருபுறம். மேகம் போலும் கண் என்று கூறுவதில் கவிச்சக்கரவர்த்திக்கு விருப்பம் அதிகம் போலும். 'மழைபொரு கண்ணினை மடந்தைமார்' (கம்ப. 573) 'மழைக்கண் என்பது காரணக்குறி' (கம்ப. 5074) புரைமழைக்கண் எனப் பிரித்து உயர்ந்த குளிர்ந்த கண் என்றும் கூறலாம். மழைக்கண் - குளிர்ந்த கண் என்பதே சங்க வழக்கு. பூங்குழைக்கு அமர்ந்த ஏந்தெழில் மழைக்கண் (நெடுநல் 38)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women whose thread-thin waists seemed to cry 'It breaks, it breaks!', whose pair of lovely unshrinking breasts
- were like caskets set on either side, half hidden by upper cloths that let them shine through, swaying,
- turning their lotus faces framed by earrings to look at him, with gentle smiles and red-lily lips —
- and the host of their bright cloud-dark eyes with reddened corners made war upon his chest and shoulders —
What the poem says
Lovely women sway beside Irāvaṇaṉ: their waists are as thin as a thread and seem about to snap under the weight of their breasts, which are like jewel caskets showing through their upper garments.
They turn their lotus faces to glance at him, smiling with lips like red water-lilies, and the glances of their dark, red-cornered eyes strike his chest and shoulders like weapons in battle. Kampaṉ is fond of comparing eyes to dark rainclouds.