கம்பராமாயணம் 5209 · சுந்தர 4.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சோலையின் தொழுதி - சோலையின் தொகுதிபோன்ற; கற்பக தருவும் - கற்பக மரங்களும்; நிதிகளும் - சங்கநிதி, பதும நிதி முதலிய நிதிகளும்; மாலையும் - மாலைகளையும், சாந்தும் - சந்தனத்தையும் கலவையும் - (மற்றைய) குங்குமம் முதலான கலவைகளையும்; பூணும் - ஆபரணங்களையும்; வயங்கு - விளங்கும்; நுண் தூசொடு - நுண்ணிய ஆடைகளையும்; காசும் - மணிகளையும்; கொண்டு - எடுத்துக்கொண்டு; பின்தொடர - பின்பற்றி வரவும்; வெண்பால் பரவை - வெண்மையான பாற்கடலின்; திரை - அலைகள்; கருங்கிரிமேல் - கரிய மலைமேல்; பரந்தென - பரவினாற் போல; சாமரை பதைப்ப - வெண்சாமரை சுழலவும்; வேலை நின்று - கடலிலிருந்து; உயரும் - உயர்ந்து செல்லும்; முயல் இல் வெண் மதியின் - களங்கமில்லாத வெள்ளிய சந்திரனைப் போல; வெண்குடை மீதுற விளங்க - வெள்ளிய குடை மேலே விளங்கவும்.
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் என்று முன்பு (கம்ப. 4861) பேசப்பெற்றது. பாலின் வெண்பரவை - இதில் உள்ள 'இன்' அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- Garlands, sandal paste, saffron unguents, jewels, along with shining fine cloths and gems,
- carried by the wishing-trees in clustered groves and by the treasure-hoards following behind him,
- white whisks fluttering like the waves of the white sea of milk spreading over a black mountain,
- and his white parasol shining above him like a spotless white moon rising from the ocean —
What the poem says
Even the heavenly wishing-trees and the divine treasure-hoards of Kubēraṉ follow Irāvaṇaṉ like servants, carrying garlands, perfumes, jewels, fine clothes and gems.
White yak-tail whisks wave around his dark form like the waves of the milk ocean breaking over a black mountain, and his white royal umbrella rises above him like a full moon without its hare-shaped mark.