கம்பராமாயணம் 5210 · சுந்தர 4.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆர்கலி அகழி - கடலையே அகழாகப் பெற்ற; அருவரை இலங்கை - திரிகூட மலையில் அமைந்த அரிய இலங்கை; அடிபெயர்த்திடும் தொறும் - (இராவணன்) பாதம் பெயர்த்து வைக்கும் போதெல்லாம்; அழுந்த - கீழே அமிழவும்; நேர்தரும் - இலங்கையைச் சூழ்ந்துள்ள; பரவைப் பிறழ்திரை - கடலில் புரள்கின்ற அலைகள்; தவழ்ந்து - தத்திச் சென்று; நெடும் தடம் திசை தொறும் - நீண்ட பெரிய திக்குகள் தோறும்; நிமிர - கொந்தளிக்கவும்; சார்வு அரும் - அணுக முடியாத; கடுவின் எயிறுடை - விடப் பற்களையும்; பகுவாய் - பிளந்த வாயையும் (பெற்ற); அனந்தனும் - ஆதிசேடனும்; தலைதடுமாற - நிலைகுலையவும்; மூரி நீர் ஆடை - வலிமை மிக்க கடலை ஆடையாகப் பெற்ற; இரு நில மடந்தை - பெரிய பூமி தேவியானவள்; முதுகு உளுக்குற்றனள் - முதுகு நெளியப் பெற்று; முரல - சுற்றவும்.
உளுக்குதல் - நெளிதல். 'நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற' (கம்ப. 075, 2408)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ilaṅkai, on its hard mountain, with the ocean for its moat, sinking each time he lifted his foot and set it down,
- the tossing waves of the encircling sea creeping out and surging up in every long wide quarter,
- Aṉantaṉ himself, with the gaping mouth and the unapproachable poison fangs, reeling in his heads,
- and the Lady of the wide Earth, robed in the mighty sea, groaning with her back sprained —
What the poem says
Irāvaṇaṉ's tread is so heavy that the island city of Ilaṅkai, set on Mount Trikūṭa and moated by the sea, sinks a little with each step.
The surrounding waves surge out in every direction; Aṉantaṉ, the cosmic serpent who bears the earth on his heads, sways beneath the weight; and the Earth-goddess, clothed in the ocean, cries out as her back is wrenched.