கம்பராமாயணம் 5211 · சுந்தர 4.95

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாடகைக்கு இரட்டி - தாடகையை விட இரண்டு பங்கு; எறுழ்வலி - மிக்க வலியை; தழைத்த - பெருகியுள்ள; தகைமையர் - தன்மை உடைய; தடவரை பொறுக்கும் - பெரிய மலையைச் சுமக்கும்; சூடகத் தடக்கை - வளையல் அணிந்த கைகளால்; சுடுசினத்து அடுபோர் - பகைவரை அழிக்கும் போரில் வல்ல; அரக்கியர் - அரக்கிகள்; கேடகத்தோடு - கேடகத்தையும்; மழு - மழுவையும்; எழு - இருப்புலக்கையையும்; சூலம் - சூலத்தையும்; அங்குசம் - அங்குசத்தையும்; கப்பணம் - இரும்பால் செய்த ஆனைநெருஞ்சி முள்ளையும்; கிடுகு - கடுகையும்; ஆடகச் சுடர்வாள் - பொன்வாளையும், அயில் - வேலையும்; சிலை - வில்லையும்; குலிசம் - வச்சிராயுதத்தையும்; முதலிய - முதலான; ஆயுதம் அனைத்தும் - எல்லா ஆயுதங்களையும்; தலை தொறும் சுமப்ப - தலைகள் தோறும் தாங்கவும்.

கப்பணம் - நெருஞ்சி முள் போன்ற ஆயுதம். காய்ந்தனன் கருக, உந்திக் கப்பணம் சிந்தினாளோ (சிந்தாமணி 285) கிடுகு, கேடக வகைகளில் ஒன்று. கேடக வகைகளைச் சிந்தாமணி 2218 ஆம் பாடல் பேசும். கிடுகு - மயிர்க்கிடுகு என்று இனியர் விளக்கினார். சூடகம் - வளையல். உம்மைப் பொருள் தந்த 'ஒடு'வை எல்லாவற்றுடன் கூட்டுக. மழுவொடு, எழுவொடு எனச் சேர்க்கவும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Shield, axe, iron club, trident, goad, caltrop, buckler,
  2. bright sword of gold, spear, bow, thunderbolt and every other weapon
  3. were carried on their heads by ogresses of fiery wrath, deadly in battle, with strength twice that of Tāṭakai,
  4. their great bangled hands able to bear up huge mountains —

What the poem says

Behind Irāvaṇaṉ come ogresses twice as strong as Tāṭakai, the ogress Irāmaṉ killed in his youth, with braceleted arms that could lift mountains.

They carry every kind of weapon on their heads: shields of different kinds, axes, iron clubs, tridents, elephant-goads, caltrops, golden swords, spears, bows and thunderbolts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēṭakattōṭu, maḻu, eḻuc cūlam, aṅkucam, kappaṇam, kiṭukōṭu,
āṭakac cuṭarvāḷ, ayil, cilai, kulicam, mutaliya āyutam aṉaittum,
tāṭakaikku iraṭṭi eṟuḻvali taḻaitta takaimaiyar, taṭavarai poṟukkum
cūṭakat taṭakkaic cuṭuciṉattu, aṭupōr arakkiyar talaitoṟum cumappa.