கம்பராமாயணம் 5212 · சுந்தர 4.96

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விரிதளிர், முகை, பூக் கொம்பு, அடை, முதல், வேர், பழம், இவை, மணி பொனால் வேய்ந்த
தரு உயர் சோலை திசை தொறும் கரியத் தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழத்
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும், திகைப்பு உறு சிந்தையால், கெடுத்தது
ஒருமணி நேடும் பல்தலை அரவின், உழைதொறும் உழைதொறும் உலாவி.

பொருள் · Meaning in Tamil

விரிதளிர் - விரிந்த தளிர்கள்; முகை - அரும்பு; பூ - மலர்கள்; கொம்பு - கிளைகள்; அடை - இலைகள்; முதல் - அடிப்பகுதி; வேர் - வேர்; இவை எலாம் - இவை முதலிய உறுப்புகள் எல்லாம்; மணிபொனால் - மணியாலும் பொன்னாலும்; விரிந்த - ஆகிய; தருவுயர் சோலை - தருக்களால் உயர்ந்த சோலையானது; திசை தொறும் கரிய - திக்குகள் தோறும் கரியும்படி; தழல் உமிழ் - நெருப்பைக் கக்கும்; உயிர்ப்பு - பெருமூச்சு; முன் தவழ - முன்னே பரவிச் செல்ல; திருமகள் இருந்த - பிராட்டியிருந்த; திசையறிந்திருந்தும் - திசையைத் தெரிந்திருந்தும்; திகைப்புறு சிந்தையான் - தடுமாறிய உள்ளத்தால்; கெடுத்தது - தவறவிட்ட; ஒரு மணி நேடும் - ஒப்பற்ற மணியைத் தேடுகின்ற; பல்தலை அரவின் - பலதலைகளை உடைய பாம்பைப் போல; உழைதொறும் உழைதொறும் - பலபகுதிகளில்; உலாவி - திரிந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his fire-spewing breath creeping ahead of him, so that the grove of tall trees whose spreading shoots, buds, flowers,
  2. branches, leaves, trunks and roots were all fashioned of gems and gold was scorched black in every direction,
  3. though he knew where the Lady of Fortune was, his mind bewildered,
  4. he roamed from place to place like a many-headed serpent searching for the one jewel it has lost —

What the poem says

The long description reaches its main verb. The grove's trees are made entirely of gems and gold, down to their roots, yet Irāvaṇaṉ's fiery sighs of desire scorch them black wherever he goes.

Though he knows perfectly well where Cītai sits, his mind is so confused by love that he wanders about the grove like a many-headed cobra hunting for the precious gem it has lost; the image fits his ten heads.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viritaḷir, mukai, pū, kompu, aṭai, mutal, vēr ivai elām, maṇi poṉāl virinta
taru uyar cōlai ticai toṟum kariyat taḻal umiḻ uyirppu muṉ tavaḻat
tirumakaḷ irunta ticai aṟintirukkum, tikaippuṟu cintaiyāṉ, keṭuttatu
orumaṇi nēṭum paltalai araviṉ, uḻaitoṟum uḻaitoṟum ulāvi.