கம்பராமாயணம் 5213 · சுந்தர 4.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனையது - இத்தகைய; ஓர்தன்மை - ஒப்பற்ற (ஆடம்பர) இயல்புடன்; வந்து எய்துகின்றானை - அங்கு வந்து சேர்ந்த; எறுழ்வலி - மிக்க வலிமையுடைய; அரக்கர் ஏந்தல் - அரக்கர்களின் தலைவனான இராவணனை; அனையது ஓர் தன்மை - அப்படிப்பட்ட ஒப்பற்ற இயல்புடைய; அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின் புதல்வனான அனுமன்; கண்டனன் - பார்த்து; அமைவுற நோக்கி - பொருந்த ஆராய்ந்து; வினையமும் - இராவணனின் வஞ்சகமும்; செயலும் - (பிராட்டியின்) செய்கையும்; மேல்விளை பொருளும் - (அதனால்) பின்னே உண்டாகும் பயனும்; இவ்வழி விளங்கும் - இவ்விடத்தில் புலப்படும்; என்று எண்ணி - என்று நினைந்து; கழல்வனை - வீரக்கழல் அணிந்த; இராமன் பெரும் பெயர் - இராமபிரானுடைய புகழை; ஓதி - கூறி; அயல்வந்து - பக்கத்திலே வந்து; மறைந்து இருந்தனன் - மறைவாயிருந்தான்.
மேல் 79 ஆம் பாடல் முதல் 95 ஆம் பாடல் முடியவுள்ள பாடல்களில் உள்ள 'செய' என் எச்சம் மேல் பாடலில் உள்ள 'உலாவி' என்பதுடன் நிறைவு பெற்றது. உலாவி என்பது இப்பாடலில் உள்ள எய்துகின்றானை என்பதுடன் சார்கிறது. பெயர் - புகழ். 'பெரும் பெயர்ப் பெண்டிர்' சிலம்பு (நடுகல் 208) பெயர் இராமனுடைய பெயர் என்றும் கூறலாம். வால்மீகம் அனுமன் இராமன் புகழ் ஓதி மரத்தில் இருந்ததாகப் பேசும். அனையது ஓர்தன்மை - உளம் அறிசுட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord of the demons, of mighty strength, arriving in such a manner —
- Añcaṉai's son, himself of such a nature, saw him, and watched him closely;
- thinking, 'His guile, her conduct and what will follow from them will all become clear here,'
- he recited the great name of Irāmaṉ of the warrior anklets and stayed hidden close by.
What the poem says
Here the twenty-verse sentence finally closes: Irāvaṇaṉ, in all this pomp, comes to where Cītai is, and Aṉumaṉ, son of Añcaṉai, sees him.
Aṉumaṉ decides to watch carefully, reasoning that Irāvaṇaṉ's treachery, Cītai's response and what will come of it will all be revealed here. Repeating Irāmaṉ's glorious name for courage, he moves closer and stays hidden. In Vālmīki too he sits in the tree reciting Rāma's praises.