கம்பராமாயணம் 5214 · சுந்தர 4.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயிடை - அவ்விடத்தில், அரம்பையர் குழுவும் - தேவ மகளிர் கூட்டமும்; அல்லவும் - மற்றையர் மகளிர் கூட்டமும்; அயல் - பக்கத்தில், வேறு - வேறாக; அகல - நீங்க; அரக்கன் - இராவணன்; பெண்ணின் விளக்கு எனும் தகையாள் - பெண்களுக்குள் விளக்கு என்று கூறப்படும் தகுதிபெற்ற பிராட்டி; இருந்துழி - இருந்த இடத்திற்கு; மேயினன் - அடைந்தான். ஆண்டு - அங்கே; அவள் - பிராட்டி; வெருவி - அச்சம் அடைந்து; போயின உயிரள் ஆம் என - நீங்கிய உயிரை உடையவள் போல; நடுங்க - பதறி; பொறிவரி - புள்ளிகளையும் வரிகளையும்; எறுழ்வலி - மிக்க வலிமையையும்; புகைக்கண் - புகை எழும் கண்களையும்; காய்சினம் - எரிக்கும் சீற்றத்தையும் (பெற்ற); உழுவை - புலியானது; தின்னிய - (தன்னை) தின்னும் பொருட்டு; வந்த - வருதலைப் பெற்ற; இளம் - இளமையான; கலை பிணை என - ஆண் மானினுக்குரிய பெண்மான் போல்; கரைந்தாள் - புலம்பினாள்.
போயின உயிரள் - என்பது 'அருங்கேடன்' என்பது போல் (குறள் 210) வந்த வடமொழி மரபு. திருக்குறள் நுண் பொருள் மாலை இதனை நன்கு விளக்கும். (46- பக்கம்) வந்த - வரப்பெற்ற.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, as the throngs of nymphs and the others drew apart and away to the side, the demon
- came to where she sat, she who is called the lamp of womanhood; and there, in terror,
- she trembled as though her life had already left her, and wept like a young doe, mate of a buck,
- when a tiger comes to devour her — spotted and striped, mighty, with smoking eyes and burning rage.
What the poem says
Irāvaṇaṉ sends his retinue of nymphs and attendants aside and approaches Cītai, the 'lamp among women'.
She shakes with fear as though her life had already fled, and cries out like a young doe, a stag's mate, facing a fierce tiger with smouldering eyes that has come to eat her.