கம்பராமாயணம் 5215 · சுந்தர 4.99

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூசி ஆவி குலைவுறு வாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்
ஊசல் ஆடல் ஒழிந்த உளத்தினான்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்)

கூசி - அருவருப்புற்று; ஆவி குலைவுறுவாளையும் - உயிர் குலைகின்ற பிராட்டியையும்; ஆசையால் - காமத்தால்; உயிர் ஆசு - உயிர்க்கு ஆதாரமாகிய ஒழுக்கம்; அழிவானையும் - சிதைகின்ற இராவணனையும், காசு இல் - குற்றம் இல்லாத, இணைகண் - இரண்டு கண்களும்; சான்று என - சாட்சி என்று (அமைத்து); கண்டனன் - பார்த்து; ஊசல் ஆடி - தடுமாற்றம் அடைந்து (அதனால்); உளையும் - உளைச்சல் அடையும்; உளத்தினான் - மனம் உடையவன் ஆனான்.

அனுமன் குலைகின்ற பிராட்டியையும், காமத்தால் சிதைகின்ற இராவணனையும் கண்டு, ஊசல் ஆடி, மனம் உளைச்சல் உற்றான். ஊசல் ஆடுவது பிராட்டிக்கு என்ன நேருமோ என்னும் அச்சத்தால். பிராட்டி கூசுவதால் அவள் கற்பு காக்கப்படும். ஆனால், வேறு தீங்கு நேருமோ என்று அஞ்சினான். ஆசு - ஆதாரம். உயிர்க்கு ஆதாரம் ஒழுக்கம். உயிர்க்கு ஆதாரம் அழிந்தமையின் இராவணன் இறந்தவனே. 'விளிந்தாரின் வேறல்லர், தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார்' என்பது தமிழ் மறை (குறள் 143)

இவ்விருத்தம் மா - விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று வரும். இப் பாடலை அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கள் அளவடி நான்குடைக் கட்டளைக்கலிப்பா என்பர் (மணிமலர் 76)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her, shrinking in disgust, her life breaking apart,
  2. and him, losing through lust the very prop of his life,
  3. he saw, with his two flawless eyes as witnesses,
  4. and his heart swung to and fro in anguish.

What the poem says

In a new metre, Kampaṉ shows Aṉumaṉ watching the two of them: Cītai recoiling, near to death with revulsion, and Irāvaṇaṉ destroying through lust the moral conduct that sustains life.

Aṉumaṉ's mind swings back and forth in distress. He knows her shrinking will protect her chastity, but fears some other harm may befall her. The commentary cites the Kuṟaḷ: one who lusts after another man's wife is no different from the dead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūci āvi kulaivuṟu vāḷaiyum
ācaiyāl uyir ācu aḻivāṉaiyum
kācu il kaṇ iṇai cāṉṟu eṉak kaṇṭaṉaṉ
ūcal āṭi uḷaiyum uḷattiṉāṉ.