கம்பராமாயணம் 5216 · சுந்தர 4.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊழிதோறும் - யுகங்கள்தோறும்; புதிது உறும் - புதுமையடையும்; கீர்த்தியான் - புகழை உடைய அனுமன்; சானகி - சீதாபிராட்டி; வாழி - வாழ்க; இராகவன் - இராமபிரான்; வாழி - வாழ்க; நான்மறை - நான்கு வேதங்கள்; வாழி - வாழ்க; அந்தணர் - அந்தணர்கள்; வாழியர் - வாழ்க; நல்லறம் - நல்ல தருமம்; வாழி - வாழ்க; என்று - என; உற வாழ்த்தினான் - நன்றாக வாழ்த்தினான்.
ஊழிக்காலந்தோறும் புதுமை அடையும் புகழாளனான அனுமன் பிராட்டி வாழ்க, பெருமான் வாழ்க, வேதம் வாழ்க, வேதியர் வாழ்க, நல்லறம் வாழ்க என்று வாழ்த்தினான். சானகி, இராகவன் - தத்திதம்; சனகன் புதல்வி; ரகுவின் மரபினன் இதனைப் பிரயோக விவேகம் சாமானிய தத்திதன் (32) என்று கூறும். உயர்ந்த புகழ் அல்லால் --- நிற்பது ஒன்று இல் என்று வேதம் பேற்று. கவிச்சக்கரவர்த்தி அதனை ஒளிமயமாக்கினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Long live Cāṉaki! Long live Irākavaṉ!
- Long live the four Vedas! Long live the brahmins!
- Long live good dharma!' — so he blessed them fervently,
- he whose fame grows new in every age.
What the poem says
Faced with this crisis, Aṉumaṉ, whose fame is renewed in every age, pours out blessings: on Cāṉaki, daughter of Caṉakaṉ, on Irākavaṉ of Raghu's line, on the Vedas, on the brahmins and on righteousness.
His prayer is both an expression of devotion and a call upon the powers of good to protect Cītai at this dangerous moment.