கம்பராமாயணம் 5217 · சுந்தர 4.101

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்
'எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது
நொவ் விடக் குயிலே! நுவல்க 'என்றனன்
வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.

பொருள் · Meaning in Tamil

வெவ்விடத்தை - கொடிய நஞ்சினை; அமுதென - அமுதம் என்று கருத; வேண்டுவான் அரக்கன் தான் - (அதை) விரும்பும் இராவணன் தான்; அவ் இடத்து - அந்த இடத்திலே; அருகு எய்தி - பக்கத்தை எய்தி, நொவ்இடைக்குயிலே - வருந்தும் இடைபெற்ற குயில் போன்றவளே; எனக்கு - (உன்பால் அன்புடைய) எனக்கு; அருள் ஈவது - அருளை வழங்குவது; எவ்இடத்து - எப்போது; நுவல்க என்றனன் - கூறுக என்றான்.

நொ - வருத்தம். அமர்ந்தனன் என்னும் முற்று வினை எச்சப் பொருளில் வந்தது. இது முதல் 14 பாக்கள் இராவணன் மொழிகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming close to her in that place, the demon,
  2. who craved deadly poison as though it were nectar, said,
  3. 'When will you grant me your sweet grace?
  4. Tell me, cuckoo with the aching waist!'

What the poem says

Irāvaṇaṉ approaches Cītai and asks when she will at last show him her favour. He addresses her as a cuckoo, for her sweet voice, with a waist that aches under its own slenderness.

Kampaṉ comments on his folly: he longs for deadly poison, which is what Cītai will prove for him, as if it were nectar. The next fourteen verses are Irāvaṇaṉ's speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av iṭattu aruku eyti arakkaṉ tāṉ
'ev iṭattu eṉakku iṉ aruḷ īvatu
nov iṭaik kuyilē! nuvalka 'eṉṟaṉaṉ
vev viṭattai amiḻtu eṉa vēṇṭuvāṉ.