கம்பராமாயணம் 5218 · சுந்தர 4.102

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான்.

பொருள் · Meaning in Tamil

ஈசற்கு ஆயினும் - (எதிர்வருபவன்) சிவபிரான் ஆனாலும் (அவனுக்கும்); ஈடு அழிவுற்று - வலிமை அழிந்து; இறை - சிறிதும்; வாசிப்பாடு அழியாத - பெருமிதம் குன்றாத; மனத்தினான் - உள்ளத்தை உடைய இராவணன்; ஆசைப்பாடும் - ஆசையும்; அந்நாணும் - அந்த நாணமும்; அடர்த்திட - வருத்திட (அதனால்); கூசிக் கூசி - கூசிக் குறுகி; இனையன - இப்படிப்பட்ட மொழிகளை; கூறினான் - சொன்னான்.

ஈடு - வலிமை. வாசிப்பாடு - பெருமிதம். கூசுதல் - வெட்கம் சுருக்கம் என்னும் பொருளில் வந்தன. கண் சுருங்குதலை, சுடர்கண்டு கண் கூசிற்று என்பதால் அறிக. அந்நாண் - உளம் அறிசுட்டு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose mind would not lose its pride in the least,
  2. nor lose its strength, even before Īcaṉ himself,
  3. now pressed by his desire and by that shame,
  4. spoke these words, shrinking and shrinking.

What the poem says

Irāvaṇaṉ, who would not lose a scrap of his pride or strength even if Civaṉ himself confronted him, is now crushed between lust and embarrassment.

He shrinks into himself with shame as he speaks the words that follow; the verb used is the same as for eyes narrowing before a bright light.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īcaṟku āyiṉum īṭu aḻivuṟṟu iṟai
vācippāṭu aḻiyāta maṉattiṉāṉ
ācaippāṭum annāṇum aṭarttiṭak
kūcik kūci iṉaiyaṉa kūṟiṉāṉ.