கம்பராமாயணம் 5219 · சுந்தர 4.103

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!

பொருள் · Meaning in Tamil

குழை சென்று - காதணியின் பக்கலில் போய், இறங்க - திரும்பி; மறம் தரு - கொடுமையைச் செய்யும்; செங்கணாய் - சிவந்த கண்களைப் பெற்ற சீதையே; இன்று இறந்தன - (நீ இரங்குவாய் என்று யான் கருதிய) பல இன்றைய தினங்கள் கடந்து போயின; நாளை இறந்தன - (உன் மனம் மாறும் என்று யான் கருதிய) பல நாளைகள் கடந்தன. என்திறம் தரும் - என்பால் நீ வழங்கும்; தன்மை இது - அருள் இப்படி (உள்ளது); எனைக் கொன்று - என்னை வருத்தி; இறந்த பின் - யான் இறந்த பிறகு; கூடுதியோ - சேர்வாயோ.

செவியின் குழையைக் கண்கள் தொடுவதாகப் பேசுவது கவி மரபு. 'இடைக்குமிழ் ஈர்ந்து கடைக்குமிழ் ஓட்டி' (சிலம்பு 4-69) 'மங்கையர் வதன சீதமதி இருமருங்கும் ஓடிச் செங்கயல் குழைகள் நாடும்' (பெரிய - தடுத்தாட் - 1)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Todays have passed, and tomorrows have passed;
  2. this is the way you treat me. Will you
  3. join me only after you have killed me and I am gone,
  4. you whose cruel red eyes run out to touch your earrings?'

What the poem says

Irāvaṇaṉ complains that day after day has passed, every 'today' when he hoped she would relent and every 'tomorrow' when he hoped she would change her mind, and still she treats him coldly.

Will she come to him only after she has tormented him to death? He addresses her by her long eyes, which stretch to her earrings and wound him. Eyes reaching the ears is a classical mark of beauty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṟu iṟantaṉa nāḷai iṟantaṉa
eṉ tiṟam tarum taṉmai itāl; eṉaik
koṉṟu iṟantapiṉ kūṭutiyō? kuḻai
ceṉṟu iṟaṅka maṟam taru ceṅkaṇāy!