கம்பராமாயணம் 5220 · சுந்தர 4.104

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திலகமே! - பெண்களுக்குள் திலகம் போன்றவளே; உலகம் மூன்றும் - மூன்று உலகத்தையும், ஒருங்குடன் - ஒரு சேர; ஓம்பும் - பாதுகாக்கும்; என் - என்னுடைய; அலகு இல் - அளவில்லாத, செல்வத்து - செல்வத்தைப் பெற்ற; அரசியல் ஆணையில் - அரசாட்சியின் அதிகாரத்தில்; உன் திறத்து - உன் காரணமாக; அனங்கன் தரு - மன்மதன் செய்யும்; கலகம் அல்லது - போரேயல்லாமல்; எளிமையும் - (வேறு) தாழ்ச்சியை; காண்டியோ - கண்டுள்ளாயா.

என் நாட்டில் கலகம் உண்டு - எளிமை இல்லை என்றான். கலகம் அல்லது எளிமையும் காண்டியால் - மன்மதன் கலகத்தை நீக்கினால் நான் அடிமை செய்யும் எளிமையையும் பின்னிட்டுக் காண்பாய் என்பது பழைய உரை (அடை - பதி) எளிமையும் - உம் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Under the royal rule of my boundless wealth,
  2. which guards all three worlds together,
  3. O jewel of a woman, have you seen any weakness
  4. save the turmoil the bodiless Kāmaṉ stirs in me on your account?'

What the poem says

Irāvaṇaṉ boasts that his empire, rich beyond measure, protects all three worlds and knows no weakness or want.

The only disorder in his realm is the turmoil that Kāmaṉ, the god of love, has stirred up in him because of her. An older reading takes it as an offer: once love's turmoil is ended, she will see him humbly serving her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakam mūṉṟum oruṅkuṭaṉ ōmpum eṉ
alaku il celvattu araciyal āṇaiyil
tilakamē! uṉ tiṟattu aṉaṅkaṉ taru
kalakam allatu eḷimaiyum kāṇṭiyō.