கம்பராமாயணம் 5222 · சுந்தர 4.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வார்குன்றா முலை! - கச்சினுள் அடங்காத தனம் பெற்றவளே! நோற்கின்றார்களும் - தவம்புரிபவர்களும்; நுண்பொருள் - நுட்பமான தத்துவங்களை; நுண்ணிதின் - சூட்சுமமாக; பார்க்கின்றார்களும் - ஆராய்பவர்களும்; பெறும் பயன் - அடையும் பயனை; பார்த்தியேல் - ஆராய்ந்து பார்த்தால்; என் சொல் - என்னுடைய கட்டளையை; மவுலியால் - கிரீடத்தினாலே; ஏற்கின்றாரோடு - ஏற்றுக் கொள்ளும் தேவருடன்; உடன் உறை - கூடி வாழும்; இன்பம் - இன்பம் ஆகும்.
இன்பமால் - இதில் உள்ள ஆல் அசை. இந்தக் கவிக்குப் பொருள், தவம் பண்ணுவோரும் சகல நூல்களைத் தெரிவோரும், பெறும் பயன் தங்களை எல்லோரும் வந்து வணங்க வேண்டும் என்பது. அப்படி செய்யாதிருக்கையிலே நான் நல்லவார்த்தை சொல்லித் தலையால் இரக்கச் செய்தேயும் ஏன் கிருபை பண்ணுகின்றிலீர் என்பது பழைய உரை (அடை - பதி) உடன் உறைதல் - ஒருங்கே வாழ்தல். 'உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்' (சிலம்பு [3 - 83)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you consider the reward that those who do penance
- and those who search out subtle truths so subtly will gain,
- O you whose breasts the bodice cannot hold, it is only the joy of living
- with those who receive my word upon their crowned heads.'
What the poem says
Irāvaṇaṉ argues that the highest reward ascetics and philosophers can hope for is to dwell in heaven among the gods, and those very gods bow their crowned heads to his commands.
So living with him would give her more than all their austerities could win. An older commentary reads it as a complaint: ascetics hope to have everyone bow to them, yet he bows his head to her and still she will not show him grace.