கம்பராமாயணம் 5223 · சுந்தர 4.107

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருளும் நாளும் மழலை வழங்குவாய்!
தெரிளும் நான்முகன் செய்தது உன் சிந்தையில்
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ?

பொருள் · Meaning in Tamil

பொருளும் - குழந்தைகளும்; யாழும் - யாழும்; விளரியும் - விளரிப்பண்ணும், பூவையும் - நாகணவாய்ப் பறவையும்; மருள - ஏக்கமடைய; நாளும் - தினமும்; மழலை வழங்குவாய் - மழலை மொழி பேசுபவளே! தெருளும் - தெளிவடைந்த; நான்முகன் - பிரம்மதேவன்; உன்சிந்தையில் - உன் உள்ளத்தில்; அருளும் - கருணையையும்; மின் மருங்கும் - மின்னல் போலும் இடையும்; அரிது ஆக்கியோ - இல்லாமல் ஆக்கிய பிறகோ; செய்தது - படைத்தது.

பொருள் - குழந்தை. 'தம் பொருள் என்ப தம் மக்கள்' (குறள். 63) சுந்தரமூர்த்திசுவாமிகள் சுவை நயம் மிக்க கலய நல்லூர்ப் பதிகத்தில் 'பெரும்பலம துடை அசுரன் தாரகனைம் பொருது - பொன்று வித்த பொருளினை முன் படைத்து கந்த புனிதன்' என்றார் (திருமுறை 7. /6-9) அரிது - என்பது இன்மைப் பொருள் தந்தது. 'அருங்கேடன்' என்பது அறிக. என்னும் குறளின் (210) குறிப்பில் அருளும் இன்மை என்று அழகர் எழுதுறெர். 'ஈயா மாக்கள் த மொழி கவர்ந்த சிற்றிடை' என்பர் குமரகுருபரர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who prattle sweetly every day, so that children, the lute,
  2. the viḷari melody and the mynah are put to confusion!
  3. Did the wise Four-faced One make you only after
  4. leaving out both mercy from your heart and substance from your lightning waist?'

What the poem says

Irāvaṇaṉ flatters and reproaches Cītai together. Her voice is so sweet that the babble of children, the lute, the plaintive viḷari melody and the talking mynah are all outdone.

He then asks whether Piramaṉ, the four-faced creator, made her without any mercy in her heart, just as he made her waist so slender it barely exists. The play is on 'scarce', meaning both 'rare' and 'absent'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poruḷum yāḻum viḷariyum pūvaiyum
maruḷa nāḷum maḻalai vaḻaṅkuvāy!
teruḷum nāṉmukaṉ ceytatu uṉ cintaiyiṉ
aruḷum miṉ maruṅkum aritu ākkiyō?