கம்பராமாயணம் 5224 · சுந்தர 4.108

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈண்டு நாளும் இளமையும் என்று இவை
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டும் நாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ?

பொருள் · Meaning in Tamil

ஈண்டு - இந்த உலகத்தில், நாளும் - ஆயுளும்; இளமையும் - இளமைப் பருவமும்; மீண்டில - திரும்பி வராதவை (அவை); மாண்டு மாண்டு - அழிந்து அழிந்து; பிறிதுறும் - வேறியல்பைப் பெறுகின்ற, மாலைய - தன்மை உடையன; வேண்டும் நாள் - (பிறர்) விரும்பும் உன் இளமைப் பருவம்; வெறிதே - வீணாக; விளிந்தால் - அழிந்தால்; வாழ்வது - (இன்புற்று) வாழ்க்கை நடத்துவது; யாண்டு - எக்காலத்தில்; இனி - (பருவம்) கடந்த பின்; இடர் உழந்து - (சென்றதை எண்ணி) துன்பத்தாற் குமைந்து (அதில்); ஆழ்தியோ - அமிழ்வாயோ.

நாள் - ஆயுள். 'ஊற்றமும் உடைய நாளும்' (கம்ப. 5202) மாலைய - தன்மை உடையன. மாலை - இயல்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Here, life's days and youth do not return;
  2. they are of a nature that dies and dies again and turns into something else.
  3. If the days you should enjoy pass away for nothing, where
  4. will you live after that? Will you sink, toiling in sorrow?'

What the poem says

Irāvaṇaṉ urges Cītai to seize the moment: in this world a lifetime and youth never come back, but fade away and change into something else.

If she lets her desirable youth go to waste, when will she ever enjoy life? Will she not drown in regret afterwards? It is the old seducer's argument that youth is fleeting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṇṭu nāḷum iḷamaiyum mīṇṭila
māṇṭu māṇṭu piṟitu uṟum mālaiya
vēṇṭum nāḷ veṟitē viḷintāl iṉi
yāṇṭu vāḻvatu? iṭar uḻantu āḻtiyō?