கம்பராமாயணம் 5225 · சுந்தர 4.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குழை முகத்து - குண்டலம் அணிந்த முகத்தை உடைய; நின் - நின்னுடைய; சிந்தனை கோடினால் - மனம் வேறுபட்டால் (அதனால்); எனக்கு - (உன்பால் அன்புற்ற) எனக்கும்; உயிர்க்கு - என்னுடைய உயிர்க்கும்; இழவு - அழிவு; எய்தினும் எய்துக - வந்தாலும் வரட்டும் (அதுபற்றி வருந்தேன்) (ஆனால்) (யான் மறைந்த பின்) பழகி - ஒன்று பட்டு; நிற்புறும் - நிலைத்து நிற்கும்; பண்பு இயை - இயல்பைப் பொருந்திய; காமத்தோடு அழகிற்கும் - காமம் அழகு என்னும் இரண்டிலும் (உனக்கு இணையாக); இனி யார் - இனிமேல் எவர் (என்னைப் போல்); உளர் ஆவர் - பிறக்கப் போகின்றார்கள்?
இழவு - அழிவு. யான் இறப்பது குறித்து வருந்தினேன். உனக்கு இணையானவர்கள் இனிப் பிறவார்களே என்று கவலைப்படுகிறேன் என்றான். உளராதல் - பிறத்தல். பழகப் பழக நிற்பது காமம் என்றான். அழகுக்கு அப்பண்பு இல்லை என்றான். மாயும் அழகு நிற்கும் போதே மாயாத காமம் அனுபவிக்கத் தக்கது என்பது இராவணன் கோட்பாடு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If your heart, O you of the earringed face, stays turned away,
- let death come to me and my life, if it must;
- but then, for a love that by its nature grows as it is shared,
- and for beauty, who will there be any more?'
What the poem says
Irāvaṇaṉ claims he does not mind if her coldness kills him. What troubles him is that, once he is gone, there will be no one left to match her in love and in beauty.
Love, he says, grows deeper with intimacy, while beauty fades; so a lasting love ought to be enjoyed while beauty still lasts. The commentary sums this up as Irāvaṇaṉ's creed.