கம்பராமாயணம் 5226 · சுந்தர 4.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சனகரின் குடியிலே பிறந்த பெண்ணே! பெண்மையும் - பெண்மை இயல்பும்; அழகும் - அழகும்; பிறழா - தவறுபடாத; மனத்திண்மையும் - உள்ள ஆற்றலும்; முதல் - (இவை) முதலாகப் பேசப்படும்; யாவையும் - எல்லாப் பண்புகளும்; செய்யவாய் - செம்மையுடையதாய்; கண்மை பொருந்தி - கண்ணோட்டத்துடன் ஒன்று பட்டுப் பொருந்தி, கருணைப் படா - இரக்கத்துடன் படாது; வண்மை - ஈகைப்பண்பு மாத்திரம் (அழிந்து போன காரணம்), என்கொல் - யாதோ.
இல் என்பதற்கு மருத நிலப் பெண் என்றும் பொருள் உள்ளது. மனைவி கிழத்தி இல்லாள் இல் என்று அனையவை மருதத் தலைவிக்காகும் என்று திவாகரம் பேசும் (மக்கள்.... தொகுதி) அது கொண்டு, சனகர் குலத்திலே தோன்றிய பெண்ணுக்கு என்றும் பொருள் கூறலாம். உணர்வால் பெறவேண்டிய காதலை இரக்கத்தால் பெற நினைக்கும் இராவணன் செயல் காமச் செவ்வி அறியாமையைப் புலப்படுத்தும். கண்மையும் பொருந்தி, காணக் கண்ணும் பொருந்தி என்பது பழையவுரை (அடை - பதி) 'சனகர்இல் மாண்டவா' என்னும் பாடல் சிறப்புடையது. சனகர் குடியில் வண்மை மட்டும் இல்லாது போனபடி எவ்வாறு என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Womanliness, beauty, unwavering firmness
- of mind and all the other virtues are perfect in you, together
- with gracious regard — so why is it that your generosity alone will not
- yield to pity, O lady of Caṉakaṉ's house?'
What the poem says
Irāvaṇaṉ says Cītai possesses every virtue: womanliness, beauty, firmness of mind and kindly regard. Why then does generosity, the one quality her father Caṉakaṉ's family is famous for, fail her when it comes to taking pity on him?
The commentary observes that Irāvaṇaṉ's attempt to win by pity a love that can only come from the heart shows how little he understands love.